பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

49


அருமை அற்ற வீட்டில் எருமையும் குடி இராது.

(இல்லாத வீட்டில். எருமையும் சேராது.)

அருமை அறியாதவன் அற்றென்ன? உற்றென்ன? 1055

அருமை அறியாதவன் ஆண்டு என்ன? மாண்டு என்ன?

(இருந்தென்ன? இறந்தென்ன?)

அருமை அறியாதவனிடத்தில் போனால் பெருமை எல்லாம் குறைந்து போம்.

அருமை பெருமை அறிந்தவன் அறிவான்.

அருமை மருமகன் தலைபோனால் போகட்டும்; ஆதிகாலத்து உரல் போகலாகாது.

அருவருத்த சாப்பாட்டை விட மொரமொரத்த பட்டினி மேலானது. 1060

(விறுவிறுத்த பட்டினி.)

அருவருப்பான சோற்றைக்காட்டிலும் விறுவிறுப்பான பசி மேலானது.

அருவருப்புச் சோறும் அசங்கியக் கறியும்.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.

அருள் வேணும்; பொருள் வேணும்; அடக்கம் வேணும்.

அருள் வேணும்; பொருள்வேணும்; ஆகாய வாணி துணையும் வேணும். 1065

அரே அரே என்பார் எல்லாம் அமுது படைப்பார்களா?

(அழுது படைப் பார்களா?)

அரை அடி ஏறினால் ஓரடி சறுக்குகிறது.

அரைக் கல்வி முழு மொட்டை.

(அறக்கல்வி.)

அரைக்கவும் மாயம்; இரைக்கவும் மாயம்.

அரைக்காசு என்றாலும் அரண்மனைச் சேவகம் நல்லது. 1070

அரைக் காசுக் கல்யாணத்துக்கு ஆனை விளையாட்டு வேறா?

அரைக் காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் மரக்கால் பொன் கொடுத்தாலும் வருமா?

(கிடையாது.)

அரைக் காசுக்குக் கல்யாணம்; அதிலே கொஞ்சம் வாண வேடிக்கை.

அரைக் காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும்; ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.

அரைக் காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது. 1075

(போன வெட்கம் வருமா?)