பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



54

தமிழ்ப் பழமொழிகள்


அவசரப் படேல்,

அவசரம் ஆனால் அரிக்கும் சட்டியிலும் கை நுழையாது.

(அரிசிச் சாலிலும்.)

அவசரம் என்றால் அண்டாவிலும் கை நுழையாது.

அவத்தனுக்கும் காணி வேண்டாம்; சமர்த்தனுக்கும் காணி வேண்டாம். 1175

அவத்தனுக்கும் சமர்த்தனுக்கும் காணிக்கை இல்லை.

அவத்தனைக் கட்டி வாழ்வதை விடச் சமர்த்தனைக் கட்டி அறுத்துப் போடலாம்.

அவதந்திரம் தனக்கு அந்தரம்.

அவதிக் குடிக்குத் தெய்வமே துணை.

அவப் பொழுதிலும் தவப்பொழுது வாசி. 1180

(நல்லது.)

அவமானம் பண்ணி வெகுமானம் பேசுகிறான்.

(அவமானம் செய்து, பேசுகிறதா?)

அவர் அவர் அக்கறைக்கு அவர் அவர் படுவார்.

அவர் அவர் எண்ணத்தை ஆண்டவன் அறிவான்.

அவர் அவர் எண்ணத்தை ஆண்டவன் ஆக்கினாலும் ஆக்குவான்; அழித்தாலும் அழிப்பான்.

அவர் அவர் மனசே அவர் அவர்க்குச் சாட்சி. 1185

அவர்களுக்கு வாய்ச்சொல்; எங்களுக்குத் தலைச் சுமை.

அவருடைய இறகு முறிந்து போயிற்று.

அவரை எம்மாதம் போட்டாலும் தை மாதம் காய்க்கும்.

அவரை ஒரு கொடியும் வடமன் ஒரு குடியும்.

(வடமன்-பிராம்மணரில் ஒரு பிரிவினன்.)

அவரைக்கு ஒரு செடி; ஆதீனத்துக்கு ஒரு பிள்ளை. 1190

(ஆதிலிங்கத்துக்கு.)

அவரை நட்டால் துவரை முளைக்குமா?

(விதைத்தால், போட்டால் விளையுமா?)

அவல் பெருத்தது ஆர்க்காடு.

அவலக் குடித்தனத்தை அம்பலப்படுத்தாதே.

அவலட்சணம் உள்ள குதிரைக்குச் சுழி சுத்தம் பார்க்கிறது இல்லை.

(பார்க்க வேணுமா?)

அவலப் பிணத்துக்கு அத்தையைக் கொண்டது. 1195

(குணத்துக்கு.)