பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

63


அழையாத வீட்டுக்கு விருந்துக்குப் போனால் மரியாதை நடக்காது. 1425

அழையாத வீட்டுக்குள் நுழையாத சம்பந்தி.

அழையா வீட்டுக்குள் நுழையாச் சம்பந்தி.

(பி-ம்.) விருந்தாளி.

அள்ளப் போனாலும் அதிர்ஷ்டம் வேண்டும்.

அள்ளரிசி புள்ளரிசி அவளானால் தருவாள்; அறியாச் சிறுக்கி இவள் என்ன தருவாள்?

அள்ளாது குறையாது; இல்லாது பிறவாது. 1430

(பி-ம்.) இல்லாது சொல்லாது.

அள்ளிக் குடிக்கத் தண்ணீர் இல்லை; அவள் பேர் கங்காதேவி.

(பி-ம்.) கங்கா பவானி,

அள்ளிக் கொடுத்தால் சும்மா; அளந்து கொடுத்தால் கடன்.

(பி-ம்.) இட்டால்.

அள்ளிக் கொண்டு போகச்சே கிள்ளிக்கொண்டு வருகிறான்.

அள்ளித் துள்ளி அரிவாள் மணையில் விழுந்தாளாம்.

அள்ளி நடுதல் கிள்ளி நடுதல். 1435

அள்ளிப்பால் வார்க்கையிலே கொள்ளிப்பால் வார்த்திருக்குது.

அள்ளிய காரும் கிள்ளிய சம்பாவும்.

அள்ளுகிறவன் இடத்தில் இருந்தாலும் கிள்ளுகிறவன் இடத்தில் இருக்கக் கூடாது.

அள்ளும்போதே கிள்ளுவது.

அள்ளுவது எல்லாம் நாய் தனக்கு என்று எண்ணுமாம். 1440

அளக்கிற நாழி அகவிலை அறியுமா?

(பி-ம்.) அளவு அறியுமா?

அளகாபுரி கொள்ளை ஆனாலும் அதிர்ஷ்ட ஈனனுக்கு ஒன்றும் இல்லை.

அளகாபுரியிலும் விறகு தலையன் உண்டு.

அளகேசன் ஆனாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.

அளந்த அளந்த நாழி ஒளிஞ்சு ஒளிஞ்சு வரும். 1445

(பி-ம்.) ஒழிந்து வழிந்து வழிந்து.

அளந்த நாழி கொண்டு அளப்பான்.

அளந்தால் ஒரு சாண் இல்லை; அரிந்தால் ஒரு சட்டி காணாது.

அளந்து ஆற்றிலே ஒழிக்க வேணும்.

அளவு அறிந்து அளித்து உண்.

(ஆத்தி சூடி. )

அளவு அறிந்து உண்போன் ஆயுள் நீளும். 1450