பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முருகன் துணை

தமிழ்ப் பழமொழிகள்

அஃகமும் காசும் சிக்கெனத் தேடு,

(அஃகம்.தானியம்; சிக்கென -விரைவாக.)
(கொன்றை வேந்தனில் உள்ளது; பழமொழி போல வழங்குகிறது.)

அஃகம் சுருக்கேல்.

(ஆத்தி சூடியில் உள்ளது. பழமொழி போல் வழங்குகிறது.)

அக்கக்கா என்றால் ரங்க ரங்கா என்கிறது.

(கிளி பேசுவது.)

அக்கச்சி உடைமை அரிசி; தங்கச்சி உடைமை தவிடா?

அக்கப் போரும் சக்கிலியர் கூத்தும். 5

அக்கரைக்காரனுக்குப் புத்தி மட்டம்.

அக்கரைக்கு இக்கரை பச்சை.

அக்கரைப் பாகலுக்கு இக்கரைக் கொழுகொம்பு.

அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.

அக்கரையானுக்கு ஆனது இக்கரையானுக்கும் ஆகட்டும். 10

அக்கரையில் இருக்கிற தாசப்பனைக் கூப்பிட்டு இக்கரையில் இருப்பவன் நாமத்தைப் பார் என்றானாம்.

அக்கரை வந்து முக்காரம் போடுது,

(முக்காரம் - முழக்கம்.)

அக்கறை தீர்ந்தால் அக்காள் புருஷன் என்ன கொக்கா?

அக்கறை தீர்ந்தால் அக்காள் மொகுடு குக்க

(மொகுடு-கணவன், குக்க-நாய்.)

அக்கன்னா அரியன்னா, உனக்கு வந்த கேடு என்ன? 15

அக்காக்காயாகச் சுற்றுகிறான்.

அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கு