பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

71


(பி-ம்.) அறைக்கு எழுதுவானா?

அன்று கட்டி அன்று அறுத்தாலும் ஆக்கமுள்ள ஆண் மகனுக்கு வாழ்க்கைப்பட வேண்டும்.

அன்று கண்டதை அடுப்பில் போட்டு ஆக்கின பானையைத் தோளில் போட்டுக் கொண்டு திரிகிறது போல.

அன்று கண்ட மேனிக்கு அழிவில்லை. 1630

அன்று கண்டனர் இன்று வந்தனர்.

(பி-ம்.) கண்டவர்.

அன்று கழி, ஆண்டு கழி.

அன்று கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்று கிடைக்கிற அரைக்காசு பெரிது.

அன்று குடிக்கக் தண்ணீர் இல்லை; ஆனை மேல் அம்பாரி வேணுமாம்.

அன்று கொள், நின்று கொள், என்றும் கொள்ளாதே. 1635

அன்று சாப்பிட்ட சாப்பாடு இன்னும் ஆறு மாசத்துக்குத் தாங்கும்.

அன்று தின்ற ஊண் ஆறு மாசத்துக்குப் பசியை அறுக்கும்.

அன்று தின்ற சோறு ஆறு மாசத்துக்கு ஆகுமா?

அன்று தின்னும் பலாக்காயினும் இன்று தின்னும் களாக்காய் மேல்.

(பி-ம்.) பழத்திலும், களாப்பழம்.

அன்று நடு; அல்லது கொன்று நடு; தப்பினால் கொன்று நடு. 1640

அன்று பார்த்ததற்கு அழிவில்லை.

அன்றும் இல்லை காற்று; இன்றும் இல்லை குளிர்.

அன்றும் இல்லை தையல்; இன்றும் இல்லை பொத்தல்.

அன்று விட்ட குறை ஆறு மாசம்.

அன்றே போச்சுது நொள்ளைமடையான்; அத்தோடே போச்சுது கற்றாழை நாற்றம். 1645

அன்றை ஆயிரம் பொன்னிலும் இன்றை ஒரு காசு பெரிது.

அன்றைக்கு அடித்த அடி ஆறு மாசம் தாங்கும்.

அன்றைக்கு அறுத்த கார் ஆறு மாசச் சம்பா.

அன்றைக்கு ஆடை; இன்றைக்குக் கோடை; என்றைக்கு விடியும் இடையில் தரித்திரம்.

(பி-ம்.) இன்றைக்குக் குடை. இடையன் தரித்திரம்.

அன்றைக்கு இட்டது பிள்ளைக்கு. 1650

(பி-ம்.) அன்னைக்கு.