பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தமிழ்ப் பழமொழிகள்


அன்றைக்கு எழுதியதை அழித்து எழுதப் போகிறானா?

அன்றைக்குக் கிடைக்கிற ஆயிரம் பொன்னிலும் இன்றைக்குக் கிடைக்கிற அரைக்காசு பெரிது.

(பி-ம்.) ஆயிரம் ரூபாயை விட.

அன்றைக்குச் சொன்ன சொல் சென்மத்துக்கும் போதும்.

(பி-ம்.) உறைக்கும்.

அன்றைக்குத் தின்கிற பலாக்காயை விட இன்றைக்குத் தின்கிற களாக்காய் மேல்.

(பி-ம்.) பெரிது.

அன்றைப்பாடு ஆண்டுப் பாடாய் இருக்கிறது. 1655

அன்னக் கொட்டிக் கண்ணை மறைக்குது.

(யாழ்ப்பாண வழக்கு.)

அன்னச் சுரணை அதிகமானால் அட்சர சுரணை குறையும்.

அன்னத் துவேஷமும் பிரம்மத் துவேஷமும் கடைசிக் காலத்துக்கு.

அன்னதானத்துக்கு நிகர் என்ன தானம் இருக்கிறது?

(பி-ம்.) சரி.

அன்னதானம் எங்கு உண்டு; அரன் அங்கு உண்டு. 1660

அன்ன நடை நடக்கத் தன் நடையும் போச்சாம்.

(தண்டலையார் சதகர்.)

அன்ன நடை நடக்கப் போய்க் காகம் தன் நடையும் இழந்தாற் போல.

அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.

அன்னப்பிடி வெல்லப் பிடி ஆச்சுது.

அன்னம் அதிகம் தின்பானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர். 1665

அன்னம் இட்டார் வீட்டில் கன்னம் இடலாமா?

அன்னம் இறங்குவது அபான வாயுவால்.

அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்.

அன்னம் பித்தம்; கஞ்சி காமாலை.

அன்னம் மிகக் கொள்வானும் ஆடை அழுக்கு ஆவானும் பதர். 1670

அன்னம் முட்டானால் எல்லாம் முட்டும்.

அன்னம் வில்வாதி லேகியம்.