பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தமிழ்ப் பழமொழிகள்


அஷ்டதரித்திரம். 1700

அஷ்டதரித்திரம் ஆற்றோடு போ என்றால் நித்திய தரித்திரம் நேரே வருகிறது.

அஷ்ட தரித்திரம் தாய் வீடு; அதிலும் தரித்திரம் மாமியார் வீடு.

(பி-ம்.) ஆத்தாள் வீடு.

அஷ்டதரித்திரம் பிடித்தவன் அமராவதியில் வாழ்கிறான் என்று நித்திய தரித்திரம் பிடித்தவன் நின்ற நிலையிலே நட்டுக் கொண்டு வந்தான்.

(பி-ம்.) பிட்டுக்கொண்டு.

அஷ்டதரித்திரம் புக்ககத்திலே ஆறாவது போது வாடுகிறேன்.

அஷ்டதிக்குக் கஜம் மாதிரி குடித்தனத்தைத் தாங்குகிறான். 1705

அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப் புலவன்.

அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது.

அஷ்டமத்துச் சனி போல.

அஷ்டமத்துச் சனியன் கிட்ட வந்தது போல.

அஷ்டமி இல்லை; நவமி இல்லை; துஷ்ட வயிற்றுக்குச் சுருக்க வேணும். 1710

அஷ்டமி நவமி ஆகாச பாதாளம்.

அஷ்டமி நவமி ஆசானுக்கு ஆகாது.

அஷ்டமி நவமியிலே தொட்டது துலங்காது.

அஷ்டமியிலே கிருஷ்ணன் பிறந்து வேஷ்டி வேஷ்டி என்று அழுகிறானாம்.

அஸ்தச் செவ்வானம் அடை மழைக்கு லட்சணம். 1715

(பி-ம் ) அஸ்தமனத்துச் செவ்வானம்.

அஸ்தி சகாந்தரம் என்றது போல் இருக்கிறது.

அஸ்தியிலே ஜூரம்.

அஸ்மின் கிராமே ஆச்சாள் பிரசித்தா.

அக்ஷர லக்ஷம் பெறும்.