பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தமிழ்ப் பழமொழிகள்



குதிரை செத்ததும் அல்லாமல் சேணம் சுமக்க வேலை ஆயிற்று.

குதிரை தூக்கிப் போட்டதன்றியும் குழியும் பறித்ததாம். 8700

(தோண்டுகிறதாம்.)


குதிரை நடக்காவிட்டால் ராவுத்தர் கொக்காய்ப் பறப்பாரோ?

குதிரை நடந்தால் அல்லவா ராவுத்தன் கொக்காய்ப் பறக்கலாம்?

குதிரை நடைவராமல் கொக்காய்ப் பறப்பானாம் ராவுத்தன்.

குதிரை நல்லது தான்; சுழி கெட்டது.

குதிரை நொண்டி ஆனாலும் கொள்ளுத் தின்ன ராஜா. 8705


குதிரை பிடிக்கச் சம்மட்டி அடிக்கக் கூப்பிட்டுக் குரலுக்கு ஏனென்று கேட்க குதிரை முட்டை.

(அவிவேக பூரண கதை.)

குதிரையான குதிரையெல்லாம் கூரையைப் பறித்துத் தின்கிற போது, குருட்டுக் குதிரை கோதுமை மாவுக்கு அழுததாம்.

குதிரையின் குணம் அறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை?

குதிரையின் கொழுப்பு அறிந்து சுவாமி கொம்பு கொடாமற் போனார். 8710


குதிரையும் ஏறிக் குதிரைக் குட்டியும் ஏறுவதா?

குதிரையும் கழுதையும் ஒன்றாகுமா?

குதிரையும் காதம், கிழவியும் காதம்.

(ஒளவையார் பாடல்.)

குதிரையைத் தண்ணீரண்டை இழுத்துச் செல்லலாமே தவிரக் குடிக்கச் செய்ய முடியாது.

குதிரையைப் போல நாயை வளர்த்து ரெட்டிச்சி, நீ குரை. 8715


குதிரை ராவுத்தனைத் தள்ளினதும் அல்லாமல் குழியும் தோண்டுகிறதாம்.

(பாகனை, பறிக்கிறதாம்.)

குதிரை வாங்கியபின் லகானுக்கு வழக்கா?

(வழக்கு.)

குதிரை வால் இருந்தால் எட்டின மட்டுந்தானே வீசும்?