பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்ப் பழமொழிகள்

33


கட்டுப் படாத பெண் சொட்டுக் கொண்டு போயிற்று.

(கொட்டு.)

கட்டுப் பானை ஊற்று எட்டு நாளைக்கே. 6420

(பனை.)


கட்டு மரத்தைச் சென்னாக்குனி அரிக்கிறது போல.

(சென்னக் குன்னி.)

கட்டுருட்டிக் காளை போல.

கட்டெறும்பு இட்டலியைத் தூக்கினது போல.

கட்டை இருக்கிற மட்டும் கஷ்டம் உண்டு.

(கவலை உண்டு.)

கட்டைக் கலப்பையும் மொட்டைக் காளையும் காணிக்கு உதவாது. 6425


கட்டைக்குப் போகும் போது காலாழி பீலாழியா?

கட்டைக் கோணல் அடுப்பில் நிமிர்ந்தது.

கட்டை கிடக்கிற கிடையைப் பார்;கழுதை குதிக்கிற குதியைப் பார்.

கட்டை போனால் அடுப்போடு.

கட்டை போனால் வெட்டை. 6430


கட்டையிலே வைக்க.

(கட்டையிலே போவான்.)

கட்டையைச் சுட்டால் கரி ஆகுமா? மயிரைச் சுட்டால் கரி ஆகுமா?

கட்டை விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டினாற் போல.

(பட்டுக் கச்சு, )

கட்டோடே போனால் கனத்தோடே வரலாம்.

கடகச் சந்திர மழை கல்லையும் துளைக்கும். 6435


கடந்த நாள் கருதினால் வருமா?

கடந்தவர்க்குச் சாதி இல்லை.

(சாதி ஏது?)

கடந்து போன காலம் கதறினாலும் வராது.

கடந்து போனது கரணம் போட்டாலும் வராது.

(வருமா?)

கடப்பாரையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் குடிக்கலாமா? 6440


கடல் உப்பும் மலை நாரத்தங்காயும் போலே.