பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தமிழ்ப் பழமொழிகள்


கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற் போல.

கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே?

(நீர் ஏது?)

கடல் தண்ணீர் வற்றினாலும் பள்ளிச்சி தாலி வற்றாது.

கடல் தாண்ட மனம் உண்டு; கால்வாய் தாண்டக் கால் இல்லை. 6445

(ஆசை இல்லை, மனம் இல்லை.)


கடல் திடல் ஆகும்; திடல் கடல் ஆகும்.

கடல் நீர் நிறைந்து ஆவதென்ன? காஞ்சிரை பழுத்து ஆவதென்ன?

கடல் பாதி, கடம்பாக்குளம் பாதி.

(கடம்பாக்குளம் - திருநெல்வேலி மாவட்டத்தில் சச்சனாவிளைக்கு அருகில் உள்ளதோர் ஊர்.)

கடல் பெருகினால் கரை ஏது?

கடல் பெருகினால் கரையும் பெருகுமா? 6450


கடல் போயும் ஒன்று இரண்டாம் வாணிகம் இல்.

(பழமொழி நானூறு.)

கடல் மடை திறந்தது போல.

கடல் மணலை எண்ணக் கூடுமா?

கடல் மீனுக்கு நீச்சம் பழக்க வேணுமா?

கடல் மீனுக்கு நுளையன் இட்டதே பேர். 6455

(சட்டம்.)


கடல் முழுவதும் கவிழ்ந்து குடிக்கலாமா?

கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.

கடலில் அகப்பட்ட மரத்துண்டு போல.

கடலில் அலையும் துரும்பு போல.

கடலில் இருக்கும் கள்ளியைக் கொள். 6460


கடலில் ஏற்றம் போட்ட கதை.

கடலில் கரைத்த புளி போல.

கடலில் கரைத்த பெருங்காயம் போல.

(இட்ட பெருங்காயம் மணக்குமா?)