பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தமிழ்ப் பழமொழிகள்

 கரைப் பக்கம் பாதை இருக்கக் கப்பல் ஏறினவனும், சொல்லாததை

    மனையாளுக்குச் சொன்னவனும் பட்ட பாடுபோல. 

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

    :(கலைப்பார்.)

கல் அடிச் சித்தன் போனவழி காடு வீடெல்லாம் தவிடு பொடி. 7095


கல் அடி பட்டாலும் கண் அடி படக் கூடாது.

கல் ஆனாலும் கணவன்; புல் ஆனாலும் புருஷன்.

கல் ஆனாலும் தடி ஆனாலும் பல் போகிறது ஒன்று.

கல் உள்ளதே கிணறு: கரை உள்ளதே தோட்டம்.

கல் எடுத்தால் நாய் ஓடும்; கம்பு எடுத்தால் பேய் ஓடும். 7100


கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆமோ?

கல் எறிக்குத் தப்பினாலும் கண் எறிக்குத் தப்பிக்க முடியாது,

(கூடாது.)

கல் என்றாலும் கணவன்; புல் என்றாலும் புருஷன்.

கல் ஒன்று, கணக்கு ஒன்று. குதிரை ஒன்று, கூத்தியாள் ஒன்று.

(கொங்கு நாட்டுக் குருக்களுக்கு உள்ளவை.)

கல் கிணற்றுக்கு ஏற்ற இரும்புத் தோண்டி. 7105


கல் கிள்ளிக் கை உய்ந்தார் இல்.

(பழமொழி நானூறு.)

கல் பிறவாத காடே உழு.

கல்மேல் எழுத்துக் கலைமான்,

கல்மேல் எழுத்துப் போல.

கல்மேல் நெல் விளையும் கல்யாணம் முடி. 7110


கல்யாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்த கதை போல.

கல்யாணத்தில் பஞ்சம் இல்லை.

கல்யாணத்திலும் பஞ்சம் இல்லை; களத்திலும் பஞ்சம் இல்லை.

கல்யாணத்துக்கு உதவாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆடுகிறது.

கல்யாணத்துக்கு வந்த பெண்டுகளிடத்தில் போனால் போவேன்; இல்லாவிட்டால் கல்லிலே வைத்து நறுக்குவேன். 7115