பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 2.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

7


ஒண்டாதே, ஒண்டாதே, ஓரிக்கால் மண்டபமே; அண்டாதே, அண்டாதே ஆயிரங்கால் மண்டபமே என்றாற் போல.

ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று.

ஒண்ணாங் குறையாம் வண்ணான் கழுதைக்கு. 5880


ஒண்ணாந் தேதி சீக்கிருப்பவனும் ஒற்றைக் கடையில் சாமான் வாங்குபவனும் உருப்பட மாட்டான்.

(இலங்கை வழக்கு.)

ஒண்ணுக்குள்ளே ஒண்ணு, எள்ளுக்குள்ளே எண்ணெய்:

ஒண்ணுக்குள்ளே ஒண்ணு, கண்ணுக்குள்ளே மண்ணாகியது.

ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு.

ஒண்ணைப் பெற்றாலும் கண்ணைப் பெறு. 5885


ஒண்ணோ, கண்ணோ?

ஒத்த இடத்தில் நித்திரை கொள்.

ஒத்த கணவனும் ஒரு நெல்லும் உண்டானால் சித்திரம் போலக் குடிவாழ்க்கை செய்யலாம்.

ஒத்தான் ஓரகத்தாள் ஒரு முற்றம்; நாத்தனார் நடு முற்றம்.

ஒத்தி வெள்ளம் வருமுன்னே அணை வோலிக்கொமின வேண்டும். 5890


ஒத்துக்கு ஏற்ற மத்தளம். ஒத்தைக்கு ஒரு பிள்ளை என்றால் புத்தி கூடக் கட்டையாகப் போகுமா?

(ஒத்திக்கு.)

ஒதி பெருத்தால் உரல் ஆகுமா?

ஒதி பெருத்தாலும் உத்தரத்துக்கு ஆகாது.

ஒதி பெருத்து என்ன? உபகாரம் இல்லாதவன் வாழ்ந்து. என்ன? 5895

(உதவாதவன்.)


ஒதி பெருத்துத் தூண் ஆமா? ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?

ஒதிய மரமும் ஒரு சமயத்துக்கு உதவும்.

ஒப்புக்குச் சப்பாணி. ஊருக்கு மாங்கொட்டை.