பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99



மை


மை இட்ட கண் கை விட்டு அழும்.

மை இட்ட கண்ணிலே மை இடு: மாமியார் பிட்டத்திலே கை இடு.

மை கரையாமல் அழுபவள் சமர்த்து. 19215


மை கரையாம முதுகு ஆட்டு.

மைத்துனன் உண்டானால் மலை ஏறிப் பிழைக்கலாம்.

(துணை இருந்தால்.)

மைத்துனனை விட உறவு இல்லை; மயிரைவிடக் கறுப்பு இல்லை.

மை மை சுந்தரி, கதவை ஒஞ்சரி.

மையலை ஊட்டும் மாதரின் மகிமை, 19220


மைலங்கி, மைலங்கி, பூ எங்கே வைத்தாய்? வாடாதே வதங்காதே அடுப்பிலே வைத்தேன்.

மை விழியார் மனை அகல்.

மை விழியாள் தன்னைச் கைவிட்டு ஒழுகு.

மைனர் ஜாலி, மணிபர்ஸ் காலி,

(மணி பர்ஸ்-Money Paurse.)