பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100


மொ

மொச்சைக் கொட்டை தின்றாலும் பொச்செரிப்பு: மோர் விட்டுச் சாப்பிட்டாலும் பொச்செரிப்பு. 19225


மொட்டு மொட்டு என்று விழித்திருந்தான்.

மொட்டை அடித்து விட்டார்.

மொட்டை இட்டால் கட்டை இடும்.

(குழந்தைக்கு.)

மொட்டைச்சிக்குத் தகுந்த மூக்கறையன்.

மொட்டைச்சிக்கு முழங்காலில் பிள்ளை. 19230


மொட்டைச்சி சொருக்கை நினைத்து அழுதது போல.

மொட்டைச்சி முண்டைக்குக் கல்யாணம் ஆகி அவள் திட்டுத் திடுக்கென்று தெருக்கோலம் போனாளாம்.

மொட்டைத் தலைக்கு ஒரு கொட்டுக் கூடை; மோழைத் தலைக்கு ஒரு தாற்றுத் கூடை.

(பொட்டுக் கூடை.)

மொட்டைத் தலைக்கு ஒரு பட்டுக் குல்லாய்.

மொட்டைத் தலைக்குச் சந்தனம் வந்தால் உள்ள மயிரைக் கொண்டுதான் சிலுப்ப வேண்டும். 19235


மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல.

(மொட்டத் தலைக்கும்.)

மொட்டைத் தலைச்சிக்குக் கூந்தல் அழகி என்று பெயர் வைத்தாற் போல.

மொட்டைத் தலையன் சன்னதம் வந்தால் உள்ள மயிரைக் கொண்டுதான் சிலுப்ப வேண்டும்.

மொட்டைத் தலையன் போருக்கு அஞ்சான்.

மொட்டைத் தலையன் முழு மோசக்காரன். 19240


மொட்டைத் தலையில் தண்ணீர் விட்டாற் போல.

மொட்டைத் தலையில் பட்டம் கட்டி ஆள வந்தானோ?

(பட்டாளம் கட்டி.)