பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

107




ராமன் வாக்குக்கு இரண்டு உண்டோ?

ராமனைப் போல ராஜா இருந்தால் அநுமானைப் போலச் சேவகனும் இருப்பான்.

ராமஸ்வாமி சகாயம், வயிறு வளர்ப்பது உபாயம் 19350


ராமாமிர்தமே ஜீவனம் என்று பட்டினியாய் இருக்கலாமா?

ராமாயணம் ரங்கு: பாரதம் பொங்கு.

ராமாயணம் வண்ட புராணம்; பாரதம் பண்ட புராணம்.

ராமேசுவரத்துக்குப் போகும்போது பாம்பனாறு குறுக்கிட்டாற் போல,

(போக.)

சாமேசுவரத்துக்கும் காசிக்கும் போயும் பிடித்த சனிசுவரன் தொலையவில்லை. 19385


ராமேசுவரம் போனாலும் சனிசுவரன் பின்னோடே.

ராயரி இட்டது கட்டளை.

ராயரி ஏறின குதிரைக்கு மேடு ஏது? பள்ளம் ஏது?

ராயர் தர்பார்.

ராவண சந்நியாசி 19360


ராவணன் குடிக்கு மகோதரன் போலும்; சுயோதனன் குடிக்குச் சகுனி போலும்.

(கயோதனன் துரியோதனன்.)

ராவுத்தர் தவிட்டுக்கு ஆலாய்ப் பறக்கிறாராம்; குதிரை கோதுமை ரொட்டிக்குப்

பறக்கிறதாம்.

ராவுத்தருக்கு மேற்கே பிரயாணம்; குதிரைக்குக் கிழக்கே பிரயாணம்.

(ராவுத்தருக்குக் கிழக்கே பயணம்...மேற்கே.)

ராவுத்தனே சினந்திருக்கும் போது குதிரை கோதுமை ரொட்டிக்கு அழுததாம்.

ராவுத்தனைத் தள்ளினதும் அல்லாமல் குழியையும் பறித்ததாம் குதிரை. 19365


ராஜகிரியைக் காவுகிறது போல.

ராஜ சமுகத்துக்கு எலுமிச்சம் பழம் போல.

(சிறப்பு.)

ராஜபத்தினி பதிவிரதை.

ராஜப் பயலோடே கூடித் தாதப் பயலும் கெட்டானாம்.

(ராஜாப் பல்.)

ராஜ வரும்படியோ, நஞ்சை வரும்படியோ? 19370