பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தமிழ்ப் பழமொழிகள்



ராஜா ஆனாலும் தன் தாய்க்கு மகனே.

ராஜா ஆனைமேல் வருகிறார் என்று வீட்டுக் கூரைமேல் ஏறினானாம்.

ராஜா இருக்கப் பட்டணம் அழியுமா?

ராஜா எவ்வழி, குடிகளும் அவ்வழி.

ராஜா ஏறிய குதிரைக்கு மேடு ஏது? பள்ளம் ஏது? 19375


ராஜா ஏறிய குதிரையைப் போல.

ராஜா கடன்படப் புழுக்கை காடித்தண்ணிர் குடித்தது போல.

ராஜா கேட்கக் கேட்க இன்னொன்று புறப்படுகிறது என்றானாம்.

ராஜ செங்கோல் தன் நாடு வரையில்.

ராஜா பெண்ணுக்கும் எனக்கும் பாதிக் கல்யாணம் ஆகிவிட்டது என்றானாம். 19380


ராஜா பெரியவனோ? போக்கிரி பெரியவனோ?

சாஜா மகள் ஆனாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான்.

(பெண் சாதி.)

ராஜா மெச்சினவள் ரம்பை,

ராஜா ராஷ்ட கிருதம் பாபம்.

ராஜா வந்தது ஆயிரம் குயனுக்குச் சமானம். 19385


ராஜாவின் பலம் இருந்தால் அஷ்டமத்துச் சனி என்ன செய்யும்?

(ராஜா-குரு.)

ராஜா வீட்டுத் தோட்டத்தில் ரோஜாப்பூப் பூத்திருந்தால்

பார்க்கலாமே தவிரப் பறிக்கலாமா?

ராஜா வீட்டு நாய் மாதிரி.

ராஜாவுக்குச் சாவு இல்லை.

ராஜாவுக்கச் செங்கோல்; சம்சாரிக்கு உழவு கோல். 19890

(சம்சாரி.உழவன்.)


ராஜாவும் பெண்ணும் கொடியும் கிட்ட இருக்கிறதைத் தழுவிக் கொள்ளும்,

ராஜாளியைக் கண்ட கொக்குப் போல.

ராஜீகம் தெய்விகம் எப்படியோ?

ராகூடிசனுக்கும் ஒரு புரோகிதன் வேண்டும்.

ராகூடிசனுக்கும் ஒரு புரோ கூடிஸன் உண்டு. 19395