பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தமிழ்ப் பழமொழிகள்




பெய்த மழையும் காய்ந்த வெயிலும் சரி.

பெய்தால் பெய்யும் புரட்டாசி; பெய்யாவிட்டால் பெய்யும் ஐப்பசி.

பெய்தும் கெடுத்தது, காய்ந்தும் கெடுத்தது.

பெய்து விளைகிறது மலையாளச் சீமை, பாய்ந்து விளைகிறது

தஞ்சாவூர்ச் சீமை; காய்ந்து விளைகிறது இராமநாதபுரம் சீமை,

(பேய்ந்து.)

பெயர் சொல்ல ஆள் இல்லை. 17100


பெரிது ஆனால் பேயும் குரங்கு ஆகும்.

பெரிய இடம் என்று பிச்சை கேட்கப் போனாளாம்; கரியை வழித்து

முகத்திலே தேய்த்தாளாம்.

பெரிய பருவதத்தினமேல் பிரயை கால இடி விழுந்தாற் போல.

பெரிய தனம் கொடுத்தால் சீதனம் கற்கலாமா?

பெரிய தேர் ஆனாலும அச்சாணி இல்லாமல் ஓடாது. 17105


பெரிய மரத்தைச் சுற்றிய வள்ளியும் சாகாது.

(மல்லியும்.)

பெரிய மனிதன் என்று பிச்சைக்குப் போனால் கரியை அரைத்து முகத்தில் :தடவினான்.

பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்த மாதிரி.

பெரிய வீட்டுக் கல்யாணம், பூனைக்குட்டிக்குச் சோறு இல்லையாம்.

பெரிய வீடு என்று பிச்சைக்குப் போனேன்; கரியை வழித்துக் கையில :தடவினார்கள். 17110

(கன்னத்தில். முகத்தில் தீற்றினார்கள்.)


பெரியார் பெருந்தலை பேய்த்தலைக்கு நாய்த்தலை.

பெரியார் வரவு பெருமான் வரவு.

பெரியாரைத் துணைக் கொள்.

பெரியோர் உள்ளம் பேதிக்கலாகாது.

பெரியோர் எல்லாம் பெரியாரும் அல்ல. 17115


பெரியோர் செய்த புண்ணியம்.

பெரியோர் திருவுள்ளம் பேதித்தால் எப்பொருளும் பேதிக்கும்.

பெரியோர் தின்றால் பலகாரம்; சிறியோர் தின்றால் நொறுங்கு தீனி.

பெரியோர் முன் எதிர்த்துப் பேசில் வெள்ளத்துக்கு முன் மரம் போல் வீழ்வார்கள்,

பெரியோர் முன் தாழ்ந்து பேசில் நாணலைப் போல் நிமிர்ந்து கொள்வார்கள். 17120