பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

13


பெரு வயிற்றை நம்பிச் சீமந்தம் வைத்தாற் போல்.

பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தத்துக்கு நாள் இட்டுக் கொண்டானாம்.

பெரு வயிறு கொண்டது அறியாமல் சீமந்தத்துக்கு வளையல்

போட்டுக் கொண்டானாம்.

பெரு வயிறு கொண்டவனுக்குக் காரிய முய்கிறது லாபம். 17175


பெரு வயிறு கொண்டவனுக்க காறி உமிழ்ந்தது ஆதாயம்.

பெருவாரிக் கழிச்சலிலே தப்பிப் பிழைத்தவன் நாட்டாண்மைக் காரன்.

பெரு வாரி பெருக்க அகமுடையானிலே பெண்ணுக்கு ஓர்

அகமுடையான் கறுப்பாய்ப் போச்சு.

பெரு வெள்ளம் பாயும் கடலில் மல வாய்க் காலும் பாயும்.

பெலாப்பூரே பாபகோக்ரே, நாசதாளி முன்னே நிரந்தரம். 17180

(பெலாப்பூர்; செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள ஓர் ஊர்.)


பெற்ற தாய் ஆனாலும் குற்றம் எத்தனை பொறுப்பாள்?

(எவ்வளவு )

பெற்ற தாய்க்கும் வளர்த்த தாய்க்கும் உதவாமற் பிரிந்த குயிலைப் போல.

பெற்ற தாய்க்கப் பிறகு பெற்ற அப்பன் சிற்றப்பன்.

(பெற்றதாய் செத்தால்.)

பெற்ற தாய் பசித்திருக்கப் பிராமண போஜனம செய்வித்தது போல.

பெற்ற தாய் மூதேவி; புகுந்த மனைவி சீதேவி. 17185

(புகுந்ததாரம்.)


பெற்ற தாயிடத்திலா கற்ற வித்தை காட்டுகிறது?

(கற்றது காட்டுகிறாய்?)

பெற்ற தாயுடன் போகிறவனுக்குப் பக்தம் ஏது?

பெற்ற தாயைப் பெண்டுக்கு இழுக்கிறதா?

பெற்றது எல்லாம் பிள்ளை ஆமோ? இட்டது எல்லாம் பயிர் ஆமோ?

பெற்றது எல்லாம் பிள்ளை ஆகுமா? நட்டது எல்லாம் மரம் ஆகுமா? 17190


பெற்றது எல்லாம் பிள்ளை ஆகுமா? பூத்தது எல்லாம் காய் ஆகுமா?

பெற்றது எல்லாம் பிள்ளையோ? நட்டது எல்லாம் பயிரோ?

பெற்றது எல்லாம் பிள்ளையோ, விளைந்தது எல்லாம் குசக்கலமோ?