பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தமிழ்ப் பழமொழிகள்



பேசின வாயும் பீறின. கந்தையும் நில்லா.

பேசினால் அவலம்; பேசாவிட்டால் ஊமை.

(பேசினால் சாலம்.)

பேசினால் வாயாடி, பேசாதிருந்தால் ஊமைப் பயல்.

பேசுகிறது அரிவிரதம்; நோண்டுகிறது இட்டிக் கிழங்கு.

பேடிக்குத் தேவரம்பை கிடைத்ததும் பிரயோசனப் படாததைப் போல. 17240


பேடி கையில் ஆயுதம் பிரகாசிக்குமா?

பேடி கையில் ரம்பை அகப்பட்டது போல.

பேடி கையில் வாலி போல.

பேண்டால் செக்கிலே பேளுவேன்: இல்லாவிட்டால் பரதேசம் போனேன்.

பேத்திக்கு இட்டாலும் கூத்திக்கு இடாதே. 17245


பேதம் அற்றவர் நீதம் உற்றவர்.

பேதை ஆனாலும் தாய்: நீர் ஆனாலும் மோர் .

பேதைகள் வெள்ளத்தில் நின்றும், தாகத்திற்குத் தண்ணீருக்கு அலைவார்கள்.

பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.

பேப்பர் படித்தவன் முன்னுக்கு வருவானா? 17250

(செட்டி நாட்டு வழக்கு.)


பேய் அடிக்கப் பிள்ளை பிழைக்குமா?

பேய் ஆசை பிடித்தாலும் நாய் ஆசை ஆகாது.

பேய் ஆடிய கம்பம் போல.

பேய் ஆனாலும் தாய்; நீர் ஆனாலும் மோர்.

பேய் ஆனாலும் தாய் வார்த்தை தட்டலாமா? 17255


பேய் இல்லாத் தலை ஆடாது; பேன் இல்லாத் தலை கடிக்காது.

பேய்க்குக் கள் வார்த்தாற் போல.

பேய்க்கும் பார்; நோய்க்கும் பார்.

பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் பிடுங்குபட்டுத்தான் சாக வேண்டும்.

பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் போல. 17260


பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் புளியமரம் ஏறத்தான் வேண்டும்.

பேய்க்கு வேப்பிலை போல,

பேய்க்கு வேலை இட்டது போல.