பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

தமிழ்ப் பழமொழிகள்


கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வன்.

காக்கை விழுந்து விழுந்து கரையும். 115


காணக் கண் கோடி வேண்டும்.

காயைத் தின்றால் பழம் இல்லை.

கார்த்திகைத் தீபம் பார்த்த பிறகே சாப்பிடவேண்டும்.

காரியம் ஆனாலும் வீரியம் பேசேல்.

காலை எழுந்தவுடன் படிப்பு. 120

(பாரதியார்.)


கிளியை வளர்த்துப் பூனை தின்னக் கொடுத்தது போல.

குக்கல் வாலைக் கோலைக் கொண்டு நிமிர்த்த முடியுமா?

குக்கல் விக்கிச் செத்தது.

குரங்குப் புண்ணாகப் பண்ணுகிறான்.

குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு. 125


கூட்டத்தில் போன பாம்பு சாகாது.

கூவல் ஆமை குரை கடல் ஆமையைக் கூவலோடு ஒக்குமோ கடல் என்றது போல.

கூழுக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் என்றன் உளம்

(ஒளவையார் வாக்கு.)

கொடுத்து வைத்தது வரும்; பேராசைப் படாதே.

கொண்டை பூவுக்கு அழுகிறது; கும்பி கூழுக்கு அழுகிறது. 130


கொத்தைக்கு ஓங்கில் வழிகாட்டியது போல.

சந்திராதித்தர் உள்ள வரைக்கும்.

சமுத்திரம் கொதித்தால் விளாவ நீர் எங்கே?

சீந்திற் சர்க்கரையையும் சுக்குத் துண்டையும் தேனோடு கலந்து மோந்து பார்த்தால் தலைவலி போய்விடும்.

சீனிச் சர்க்கரை சிற்றப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா. 135


சுக்லாம் பரதரரம் குட்டி ஆயிற்று.

கம்மா இரு, சொல் அற.

சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.

செக்கு மட்டை வண்டியில் கட்டி ஒட்டினால் அது சுற்றிச் சுற்றி வரும்.

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நோகலாமா? 140


சொன்ன சொல்லைக் காப்பாற்றுகிறவன் பெரியவன்.

தந்தையார் போயினார், தாயாரும் போயினார். தாமும் போவார்.