பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

தமிழ்ப் பழமொழிகள்


பழைய மரமசிவம்.

பிழுக்கை வாரியும் பால் கொள்வர்.

பிறவியால் வருவன கேடு உள.

புதையல் எடுத்த தனம்போல.

புல்நுனைப் பணி வெங்கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை. 180


பூமிதேவி சாட்சி.

பெற்றாளே பெற்றாள் பிறர் நகைக்கப் பெற்றாளே.

பேயோடேனும் பிரிவு இன்னாது.

பொசியாதோ கீழ்க்கொம்பு நிறை குளம்?

பொற்குன்றம் சேர்ந்த தொல்காக்கையும் பொன்ரைம். 185


மணக் கோலமதே பிணர்கோலமதாம் பிறவி.

மனம் என மகிழ்வர் முன்னே; பிணப் எனச் சுடுவர் பேர்த்தே.

மத்தார் தயிர் போல் மறுகும் சிந்தை.

மத்துறு தயிரே போல மறுகும் உள்ளம்.

மதியால் விதியை வெல்ல முடியுமா? 190


மன்றத்துப் புன்னை போல மரடு படு துயரம்.

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்.

மார்கழி மாதம் திருவாதிரை வரும்.

மாலை முழுதும் விளையாட்டு. 195

(பாரதியார்.)


மானம் அழிந்து மதி கெட்டுப் போனவளே.

முகத்தைச் சுற்றி மூக்கைலப் பிடிக்கிறான்.

முகம் பாகம் பண்டமும் பாகம்.

முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி.

முயல் விட்டுக் காக்கைப் பின் போனவாறே. 200


மோத்தையைக் கண்ட காக்கை போலப் பலவினை மொய்க்கும்.

யார் அறிவார் சாநாளும் வாழ்நாளும்?

வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதே.

வாயால் கெட்டது தவளை.

வாழ்வது மாயம்; இது மண்ணாவது திண்ணம். 205


விளக்கிருங்க்க மின்மினித்திக் காய்ந்தவறே.

வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்ட அப்புல் பனி கெடுமாறு.