பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

19

பை


பை எடுத்தவன் எல்லாம் வைத்தியனா?

பைக்குள் இருந்தால் கைக்குள் வரும்.

பைசாசத்தைப் பணியேல்.

பைசா நாஸ்தி, படபடப்பு ஜாஸ்தி.

பைசாவுக்குப் பத்துப் பெண் கொசுறு குத்து. 17325


பைத்தியக்காரன் கையில் மாணிக்கம் போல.

பைத்தியக்காரன் கிழித்தது கோவணத்துக்கு ஆயிற்று.

பைத்தியக்காரன் கிழித்தது கோவணத்துக்கும் ஆகாது.

பைத்தியக்காரன் வாயால் எடுத்தாற் போல,

பைத்தியத்தைச் சுற்றிப் பத்துப் பேர். 17330


பைத்தியம் தெளிகிறது: உலக்கை எடுத்து வா, காது குத்த.

பைத்தியம் பரசிவன் .

பைத்தியம் பரிகாசம் வேணும்: ஒன்று அதிகாரம் வேணும்

பைத்தியம் பிடித்த நாய் சாராயம் குடித்தது போல.

பைத்தியம் பிடித்த நாயில் பெண் நாய் ஆனா என்ன? ஆண் நாய் ஆனா என்ன? 17335


பைத்தியம் பிடித்துப் பாயைப் பிறாண்டுகிறது.

பைத்தியமோ பண்டாரமோ என்றால், இப்போதுதான் தொடர்கிறது என்றான்.

பைத்துப் பைத்து நூற்றுப்பதிது; படையாச்சிக்குப் பத்துத் தள்ளுபடி..

(ஏமாற்றுக் கணக்கு.)

பைந்தமிழ்ட புலவோர் பாட்டுக்கு ஏற்றவன்.

பையச் சென்றால் வையம் தாங்கும். 17340


பையத் தின்றால் பனையையும் தின்னலாம்.

பையப் பணிந்தவன் பட்டணத்தைச் சுற்றான்.

பையப் பையப் பாயும் தண்ணிக் கல்லும் கசியம் பாயும்.