தமிழ்ப் பழமொழிகள்
23
பொந்தில் இருக்கிற பூசணிக்காய் போகிறதைப் பார். அங்கு இரண்டு போடு போட்டு வருகிறதைப் பார்.
- (பொந்தில் விழுந்து. மொத்துப் போட்டு.)
பொந்து ஆயிரம்; புளி ஆயிரம்.
- (ஆழ்வார் திருநகரியில் ஆயிரம் வருஷம்.)
பொத்தைச் சுரைக்காயைப் போல. 17400
பொம்மை கோபுரத்தைத் தாங்குமா?
பொய்யான பொருள் ஆசை மெய்யான அருளாசையை விலக்குகிறது.
பொய் இருந்து புலம்பும்; மெய் இருந்து விழிக்கும்.
- (கிடந்து புலம்பும் கிடந்து தவிக்கும்.)
பொய் ஒழுக்கத்தார்க்கே பொருல் சேரும்.
பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை; மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை. 17405
பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது.
- (அகப்படாது.)
பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது.
பொய் சொன்ன வாயோ பொரி தின்ற வாயோ.
- (வாயும்.}
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேணும்.
பொய் நின்று மெய்யே வெல்லும். 17410
பொய் பூரணச் சந்திரன், மெய் மூன்றாம் பிறை.
பொய் பூரணம்: மெய் இறை.
பொய் முன்னே மெய் நிற்குமா?
பொய் மெய்யை வெல்லுமா?
பொய்யாருக்குப் பொய் உரைத்தால் வெற்றியாம். 17415
பொய்யான பொருளாசை மெய்யான அருளாசையை விலக்குகிறது
பொய்யுடை ஒருவன சொல் வன்மையினால் மெய்போலும்மே - மெய்போலுமமே.
பொய்யும் ஒரு பக்கம்: பொருளாசையும் ஒரு பக்கம்.
பொய்யும் மெய்யும் நீளத் தரும்.
- (தெரியும்.)
பொய்யும் மெய்யும் போக்கிலே வெளிப்படும். 17420
பொரித்துக் கொட்டிாைலும் அசைத்துக் கொட்டாதே.