பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

27




பொன் கறுத்தால் மாற்றுக் குறையுமா?

பொன் காத்த பூதம் போல. 17500


பொன் காப்புக்கு ஆசைப்பட்டுப் புலியின் கையில் அகப்பட்டதுபோல.

பொன் காய்த்த மரம் போல இருக்கிறான்.

பொன் கிடைத்தால் பொன் முடியத் துணி கிடையாதா?

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.

பொன் குடத்துக்குப் பொட்டு இட்டுப் பார்த்தது போல. 17505


பொன் குடம் உடைத்தால் பொன்; மண் குடம் உடைத்தால் மண்.

பொன் குருவி போலப் பொருந்தி வாழ வேண்டும்.

பொன் குருவி போன இடம் போதனுக்கும் தெரியாது.

பொன் கோடி கிடைத்தாலும் புதவி கோடி கிடைக்காது.

பொன் சுட்டு ஆறுவது போல. 17510


பொன் செருப்பு ஆனாலும் காலுக்குத்தான் போடவேண்டும்.

பொன் போல் இயங்கும் குணம் சஞ்சலத்தால் குரங்காகும்.

பொன் மணி அற்றவளை அம்மணி என்பானேன்?

பொன் மலர் நாற்றம் பெற்றது போல.

பொன் முடி அல்லது சடை முடி வேண்டும். 17515


பொன் முடிந்த துணிக்கும் புத்திரனுக்கும் தீட்டு இல்லை.

பொன் விலங்கு ஆனாலும் விலங்குதானே?

பொன் விளக்கு ஆனாலும் தூண்டுகோல் வேண்டும்.

பொன் வைக்கிற இடத்தில் பூவாவது வைக்க வேண்டும்.

(பூ வைக்கிறது)

பொன்னம்பலத்துக்கும் புவனகிரிப் பட்டணத்துக்கும் என்றைக்கும் உண்டான இழவு. 17520


பொன்னம்பலம் உண்டானால் என்ன அம்பலம் கிடைக்காது?

பொன்னாங்கண்ணிக்கு புளி இட்டு ஆக்கினால் உண்ணாப்

பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.

பொன்னாங்கண்ணிக்குப் புளி இட்டு ஆக்கினால் உள்நாக்கு எல்லாம் தித்திக்கும்.

பொன்னாங்கன்ணிக்குப் புளி குத்தி ஆக்கினால்

அண்ணாமலையாகம் தொண்ணாந்து நிற்பார்.

(பொன்னாங்கண்ணிக் கீரைக்கு)

பொன்னால் பிரயோசனம் பொன்படைத்தார்க்கு உண்டு. 17525

(பட்டினத்தார் பாடல் )