பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

தமிழ்ப் பழமொழிகள்

 மந்தரகிரியால் குழம்பும் கடல் வானோர்க்கு அமுதம் ஈந்தாற் போல்.

மந்தாரப் போது பெண்களுக்குக் கேடு.

மந்தாரப் போது மதிகெட்ட பையன்களுக்குக் கேடு. 17920


மந்தாரப் போது மதி கெட்டுப் போகும்; மதிகெட்ட பெண்ணுக்கு அடி வாங்கி வைக்கும்.

மந்தி மயிரை மருந்துக்குக் கேட்டால் மரத்துக்கு மரம் தாவும்.

மந்திரத்தால் மாங்காய் விழுமா?

மந்திரத்தில் கட்டுண்ட நாகம் போல.

மந்திரம் இல்லாக் குருக்களுக்கு மணியே துணை. 17925

(தெரியாதே.)


மந்திரம் இல்லாப் பூசை அந்திபடுமளவும்.

மத்திரம் கால், மதி முக்கால்.

மந்திரம் பாதி, தந்திரம் பாதி,

மந்திரி இல்லா யோசனையும் ஆயுதம் இல்லச் சேனையும் கெடும்.

மந்திரிக்கும் உண்டு மதி கேடு. 17930


மந்திரி புத்திக்கு மதி மோசம் வந்தது.

மந்திரி வீட்டிலே முந்திரி பூத்தது; வாய்க்கு எட்டினது கைக்கு எட்டவில்லை.

(முந்திரி காய்த்தது.)

மந்தையிலும் பால், வீட்டிலும் தயிரா?

மந்தைவெளி நாய்க்குச் சந்தையில் என்ன வேலை?

மப்புக்காரன் தப்புக் கொட்டுவானா? 17935

(தட்டுவானா?)


மப்புக்காரன் போலத் தப்புத் தப்பாய்ப் பேசுகிறது.

மப்புத் தாளம் தட்டுகிறாய்.

மயானத்தில் வீட்டைக் கட்டிப் பேய்க்கு அஞ்சலாமா?

மயான வைராக்கியமும் பிரசவ வைராக்கியமும்.

மயிர் உள்ள சீமாட்டி இடக்கையாலும் முடிவாள்; வலக்கையாலும் முடிவாள். 17940


மயிர் உள்ள சீமாட்டி எப்படி முடிந்தாலும் அழகுதான்.

(எப்படி முடிந்தால் என்ன?)

மயிர் உள்ள சீமாட்டி வலக்கொண்டையும் போடுவான்;

இடக்கொண்டையும் போடுவாள்.