பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தமிழ்ப் பழமொழிகள்


மர்க்கட முஷ்டி,

மரக்கட்டையைச் சார்ந்த புல் கலப்பைக்கு அஞ்சாது.

மரக் கோனல் வாய்ச்சியால் நிமிரும்.

மரணத்திலும் கெட்ட மார்க்கத்துக்குப் பயப்படு.

மரணத்துக்கு நாலு பக்கமும் வழி. 17975


மரணத்துக்கு நாள் நட்சத்திரம் இல்லை.

மரணத்துக்கு வழி மட்டு இல்லை.

மரத்தால் கட்டி அடிக்கிறது.

மரத்தில் அணில் ஏற விட்ட நாய் போல.

மரத்தில் அறைந்த முளையை மர்க்கடம் பிடுங்கினாற் போல. 17980


மரத்தில் இருந்து விழுந்தவன்மேல் தேர் ஓடினது போல.

மரத்தில் இருந்து விழுந்தவனைப் பாம்பு கடித்தது போல.

மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்தது போல.

(முட்டியது போல.)

மரத்தின் கீழ் ஆகா மரம் .

(பழமொழி நானுாறு.)

மத்து அடியில் விழுந்த விதை முளைக்காது. 17985


மரத்துப் பழம் மரத்தடியிலே விழும்.

(மரத்தண்டை.)

மரத்தை இலை காக்கும்; மானத்தைப் பணம் காக்கும்.

மரத்தை மறைத்தது மாமத யானை.

(திருமந்திரம்.)

மரத்தை வெட்டி மரத்தின் மேலே சாய்க்கிறது போல்.

மரத்தை வைத்துக் கொண்டு பழத்தைக் கோர வேண்டும். 17990


மர நாயிலே புனுகு வழிக்கலாமா?

மர நிழலில் மரம் வளராது.

மரம் இல்லாத ஊருக்குக் கொட்டைச் செடி மரம்.

மரம் ஏறிக் கை விட்ட கதை.

மரம் ஏறிக் கைவிட்டவனும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டார்கள். 17995


மரம் ஏறுகிறவன் பிட்டத்தை எத்தனை தூரம் தாண்டுகிறது?

மரம் குறைக்கும் ஈர் வாள் மயிர்களைய மாட்டாது.

(பழமொழி நானுாறு.)

மரம் சுட்டால் கரி ஆம்; மயிர் சுட்டால் கரி ஆமா?