பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

49


மல்லாந்து படுத்துக் கொண்டா அல்லாவைத் தொழுகிறது? 18045


மல்லாந்து படுத்துக் கொண்டு மாரில் உமிழ்ந்து கொண்டது போல.

மல்லுக்கட்டிப்பிடுங்கியும் கொடாதவனா வலுவில் அழைத்துக் கொடுக்கப் போறான்?

மல்லுக்கட்டுக்காரனுக்கு மாகாணிப் பங்கு.

மல்லுக்கு ஒரு மாகாணிப் பங்கு

மல்லுக்கு மாப்பங்கு ஆகிலும் வைத்துக் கொள்ள வேணும். 18050


மலடி அறிவாளா பிள்ளையின் அருமை?

மலடிக்குத் தெரியுமா பிரசவ வேதனை?

(பிள்ளை வலி , மகப்பேறு வருத்தம்.)

மலடிக்குத் தெரியுமா பிள்ளையைப் பெற்ற அருமை?

(பிள்ளை வருத்தம் )

மலடிக்குத் தெரியுமா மகப்பேறு வருத்தம்.

மலடி பின்ளை பெற்றாற் போல. 18055


மலடி பெற்ற மகன் போல.

மலடி மகப் பெற்றாள்.

மலடி மகன்.

மலடி மகனைப் பெற்றது போல.

மலடி வயிற்று மகன் போல. 18060


மலத்தைக் கண்ட நாய்க்கு வாய் ஊறுவது போல,

மலப்பஞ்சம் நாய்க்கு உண்டோ?

மலம் தின்ன வந்த நாய் மாணியைக் கடித்ததாம்.

மலர்த் தேனை வண்டு அல்லாமல் மண்டூகம் குடிக்குமோ?

மலராத பூவுக்கு மணம் ஏது? 18065


மலரில் மணமும் எள்ளில் எண்ணெயும் உடலில் உயிரும் கலந்தது போல.

மலரும் மணமும் போல்.

மலரைக் கசக்கி மணம் கொள்வார் உண்டோ?

மலரைக் கசக்கி மோந்து பார்க்கலாமா?

மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும். 18070

(சந்தைக்கு வரும்.)


மலிந்தது கொள்ளா வணிகரும் பதரே.

மலிந்த பண்டம் கடையிலே வரும்.

மலிந்தால் தெருவில் வரும்.