பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

57


மனம் இருந்தும் சற்று வகை அற்றுப் போவான்.

மனம் உண்டானால் வழி உண்டு.

(இடம் உண்டு.)

மனம் கலங்கிப் பிரியாமல் பிடித்தவரிக்குப் பேறு உண்டாம்.

மனம் காவலா? மதில் காவலா?

மனம் கொண்டது மாங்கல்யம். 18260


மனம் கொண்டதே மாளிகை.

(கொள்கை.)

மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.

மனம் தடுமாறேல்.

மனம் போல மாங்கலியம்.

(மனம் போல் இருக்கும் மாங்கலியம்.)

மனம் போல வாழ்வு. 18265


மனம் போன போக்குக்கு வழி இல்லை.

மனம் வெளுக்க மருந்து இல்லை.

(பாரதியார்)

மனமது செவ்வையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்.

மனமயக்கம் சர்வ மயக்கம்.

மன முரண்டிற்கு மருந்து உண்டா? 18270


மனவீதி உண்டானால் இடி வீதி உண்டு.

மனிதக் குரங்கு ஆனாலும் மல்யுத்தம் போடுமாம்.

மனிதர் காணும் பொழுது மெளனம்; காணாத பொழுது ருத்திராட்சப் பூனை.

மனிதரில் சிவப்பு அழகு; நாயில் கறுப்பு அழகு.

மனிதன் ஆரம்பமாவது பெண்ணாலே; அடங்கி ஒடுங்குவதும் பெண்ணாலே. 18275


மனிதன் கையில் மனிதன் அகப்பட்டால் குரங்கு.

மனிதன் சுற்றிக் கெட்டான்; நாய் கத்திக் கெட்டது.

மனிதன் சுற்றிக கெட்டான்; நாய் நக்கிக் கெட்டது.

மனிதன் தலையை மான் தலை ஆக்குகிறாள்; மான் தலையை மனிதன் தலை ஆக்குகிறான்.

மனிதன் மட்கினால் மண்; ஆனை மட்கினால் பொன். 18280


மனிதன் மறப்பான்; இறைபடுவான்; மாறுவான்; போவான் .

மனிதனை மனிதன் அறிவான்; மட நாயைத் தடிக்கம்பு அறியும்

(மரநாயை.)