பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தமிழ்ப் பழமொழிகள்


மாம்பூவைக் கண்டு மகிழ்ந்து போகாதே.

மாமரமும் மணத்தக்காளிச் செடியும் போல.

மா மறந்த கூழுக்கு உப்பு ஒரு கேடா?

(மாவு.)

மாமன் சொத்துக்கு மருமான் கருத்தாளி. 18420


மாமனை வைத்துக் கொண்டு மைத்துனனைச் சாகக் கொடுத்தாள்.

மாமா இச்சுக் கிச்சான், ஒரு பக்கத்து மட்டையைப் பிச்சுக் கிச்சான்; மச்சான் கிச்சுக் கிச்சான்; ஒரு பக்கத்துக் கச்சையைப் பிச்சுக்கிச்சான்.

மாமாங்கச் சந்தையிலே மாடு வாங்கினது போல.

(மகான்மகச் சந்தையிலே.)

மாமி உடைத்தால் மண்கலம்; மருகி உடைத்தால் வெண்கலம்.

மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது. 18425


மாமி குற்றம் மறைப்பு: மருமகள் குற்றம் திறப்பு.

(யாழ்ப்பான வழக்கு.)

மாமி செத்து மருமகள் அழுத கதை.

மாமியார் அறுத்துப் போன பிறகுதான் காமிரா உள் நமக்குக்கிடைக்கும்.

மாமியார் உடை குலைந்தால் வாயாலும் சொல்லக் கூடாது; கையாலும் காட்டக் கூடாது.

(துணி அவிழ்ந்தால்.)

மாமியார் உடைத்தால் குழவிக்கல்; மருமகள் உடைத்தால் வைரக்கல். 18430


மாமியார் உடைத்தால் மண்கலம்; மருமகள் உடைத்தால் பொன்கலம்.

(மாமியார் உடைத்தால் மண்சட்டி; மண்பானை. பொன்கலம்: பொன் பானை.)

மாமியார் கை வெல்லத்தைப் பார்க்கிலும் மருமகன் கைத் தவிடு தேவலை.

மாமியார் கோபம் வயிற்றுக்கு மட்டம்.

மாமியா சாமான் வாங்கி மச்சு நிரம்புமா?

(செட்டி நாட்டு வழக்கு.)

மாமியார் சீலை விலகினால் வாயால் சொன்னாலும் குற்றம்: கையால் காட்டினாலும் குற்றம். 18435


மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகன் கண்ணீல் தண்ணீர் வந்ததாம்.