பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

75


முகத்தில் ஆடவில்லை.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். 18660


முகத்தில் பந்தம் கட்டிக் கொண்டு நிற்கிறான்.

(திரிகிறான்.)

முகத்தில் மூத்தவன் வாசம்.

(மூத்தவள் மூதேவி.)

முகத்தில் விழித்த தோஷம் வயிற்றில் வந்து விட்டது.

முகத்தில் விழித்தால் மூன்று நாளைக்குச் சோறு அகப்படாது.

முகத்து இச்சைக்கு முத்தார் கிட்டே போனாளாம் 18665


முகத்துக்கு அஞ்சி மூத்தாரோடு அவிசாரி போனால் குலத்துக்கு எல்லாம் ஈனமாம்.

முகத்துக்கு அஞ்சி மூத்திரம் குடித்தால் குலத்துக்கு ஈனம்.

முகத்துக்கு முகம் கண்ணாடி.

முகத்துக்கு முகம் குரங்கு முகம்,

முகத்து வேர்வை நிலத்தில் விழப் பிரயாசைப் பட்டாற்போல. 18670


முகத்தைப் பார், சப்பாத்திப் பழம் பூசிய குரங்கு மாதிரி.

முகத்தைப் பார்த்தால் பால் வடிகிறது.

முகத்தைப் பார்த்துக் கையைப் பார்.

முகத்தைப் பார்த்துப் பேசு.

முக தரிசனம் முக்கால் மைதுனம். 18675


முக தாட்சண்யத்துக்கு முண்டைச்சி கர்ப்பிணி ஆனது போல.

முகப்பிலே முத்தையா செட்டியார் வாருங்கள் என்று சொல்லுமுன்

மூன்றாங் கட்டில் உள்ள முத்தாத்தாளாச்சி மூன்று பணியாரத்துக்குப் போட்டாற் போல.
(செட்டி நாட்டு வழக்கு.)

முகம் ஆகாதிருந்தால் கண்ணாடி என்ன செய்யும்?

முகம் சந்திர பிம்பம்; அகம் பாம்பின் விஷம்.

முகாந்திரம் இல்லாமல் பகைக்கிறதா? 18680


முச்சந்தியில் நிற்கிறான்.

முட்ட நனைந்தவனுக்கு ஈரம் இல்லை; முழுதும் கெட்டவனுக்கு துக்கம் இல்லை.

முட்ட நனைந்தவனுக்கு ஈரும் இல்லை. பேனும் இல்லை; முக்காடு என்ன?