பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

81


முதலையும் மூர்க்கனும் கொண்டது விடார்.

முதலைவாய்ப் பிள்ளை மீண்டு வருமா?

முதலை வைத்துப் பெருக்காத வணிகரைப் போல.

முதுகில் அடித்தால் ஆறும்; வயிற்றில் அடித்தால் ஆறுமா? 18810


முதுகில் அடித்தால் பொறுக்கலாம்; வயிற்றில் அடித்தால் பொறுக்கலாமா?

முதுகில் அடித்தாலும் வயிற்றில் அடிக்காதே.

முதுகில் புண் இருந்தால்தானே குனியப் பயப்பட வேண்டும்?

(கூன.)

முதுகில் புண் உண்டானால் செடியிலே நுழையப் பயம்.

(காட்டிலே.)

முதுகிலும் முன் இருந்தால் முற்றத்திலும் நின்று ஆடமாட்டேனா என்று

ஆர்ப்பரிக்குமாம் தேரி மீன்.

18815


முதுகைச் சொறியச் சொன்னால் சிற்றிடையைச் சொறிகிறது ஏனோ?

முதுமைக்குச் சோறும் முறத்துக்குச் சாணமும்.

முதுகைத் தேய் என்றால் முலைமீது கை இட்டானாம்.

முந்தானை இருக்கிறது; நாலு வீடு இருக்கிறது.

முந்தியைப் பிடித்துப் போட்டு விட்டுக் குருவியைப் பிடித்து வாங்குவான். 18820


முந்திரிக் கொட்டை போல் முன்னே நிற்கிறான்.

முந்தி வத்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைத்ததாம்.

முந்தின சோற்றைத் தட்டினால் பிந்தின சோறு மலமும் சோறும்.

முந்தின சோறும் முனையும் குலைந்தால் பிந்தின சோறு மலமும் சோறும்.

முந்தினவன் கை மந்திர வாள். 18825


முந்தினோர் பிந்தினோர் ஆவார்; பிந்தினோர் முந்தினோர் ஆவார்.

முந்நாழி கறக்கிற பசு ஆனாலும் முன் இறப்பைப் பிடுங்குகிற பசு ஆகாது.

முந்நூறு மங்கலத்து முனி போல இருக்கிறான்.

(வட ஆர்க்காடு வழக்கு.)

முப்பணிதியும் இட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறையா?

முப்பத்திரண்டு லக்ஷணங்களில் இரண்டுதான் குறைவு; தனக்காகவும் தெரியாது;

சொன்னாலும் கேட்பது இல்லை. 18830