பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தமிழ்ப் பழமொழிகள்


மூ


மூக்கறைக்கு முகுசம் காட்டினால் கோபம் வரும். 18975

(முகுரம்-கண்ணாடி)


மூக்கறையள் கண்ணாடியைப் பார்த்தது போல.

மூக்கறையன் கதைபோல் பேசுகிறான்.

மூக்கறையனுக்குக் கண்ணாடிப் பகை.

மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான்;

பின்னும் போகவிடான்.

மூக்கில் இடித்ததாம்; பல்லுப் போச்சாம். 18980


மூக்கில் இருக்கிற மூக்குத்தி போனாலும் போச்சு; மூலையில்

இருக்கிற குப்பை போச்சு.

மூக்கில் பருக்கை வரும்படி தின்றான்.

மூக்கிலிக்குக் கண்ணாடி காட்டினது போல.

மூக்கு அறுபட்ட கழுதை துவானத்துக்கு அஞ்சாது,

மூக்கு அறுபட்ட மூளி காது அறுபட்ட காளியைப்பழித்தாளாம். 18985

(மூளியை.)


மூக்கு அறுபட்டவன் போல்.

மூக்கு இருக்கிற மட்டும் சளி உண்டு.

(உள்ளவரையும் சளி போகாது.)

மூக்கு உள்ள மட்டும் ஜலதோஷம் இருக்கத்தான் இருக்கும்.

மூக்குக்கு மேல் கோபம்.

மூக்குக்கு மேல் போனால் மூவாள் என்ன, நாலாள் என்ன? 18990

மூக்குத்துாள் போடாத முன்டத்துக்கு முப்பது பணத்தில்

வெள்ளி டப்பி.

மூக்குப்பிழை போனாலும் எதிரிக்குச் சகுனத்தடை ஆகவேண்டும்.

மூக்குப் புண் ஆறி அல்லவே தாசரி ஆகவேண்டும்?

முக்கும் முழியும்.

மூக்கு மயிர் பிடுங்கி ஆள் பாரம் குறையுமா? 18995

(பிடுங்கினால்.)