பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தமிழ்ப் பழமொழிகள்


மூடனுடைய பங்கு தரித்திரமும் இகழ்ச்சியும்.

மூடிக் கொண்டிருந்தால் சமுக்கம்: திறந்தால் வெட்ட வெளி.

மூடி மூடிப்போகிறவன் ஒடி ஒடி மாப்பிள்ளை பிடிப்பான். 19030

(மூடி முக்காட்டுக்குள்ளே போகிறவள். மாப்பிள்ளை கொள்வாள்.)


மூடிய முத்து உலகம் பெறும்.

(மூவுலகும் விலை பெறும்.)

மூடி வைத்த புண் ஆறாது.

மூடிவைத்தாலும் முணுமுணு என்னும்; தைத்து வைத்தாலும் டம் டம் என்னும்.

மூடின உடைமை மூன்று முலோகம் பெறும்; மூடாத உடைமை முக்கால் காகம் பெறாது.

மூடு மந்திரம். 19035


மூடு முக்காட்டுக்குன்னே போகிறவள்தான் ஒடி ஒடி மாப்பிள்னை கொள்ளுகிறது.

மூண்ணாம் முறை பகர்த்தும்போழ் சமுதிரம் மூத்ரமாகுன்னு.

(மூன்றாம் முறை எழுதும் போது சமுத்திரம் மூத்திரம் ஆகிவிடும். மலையாளப் பழமொழி.)

மூத்த குமரிக்கு முதுகிலே குழந்தை.

மூத்தது மோழை; இளையது காளை.

மூத்த பெண்ணோ, நாத்தனாரோ? 19040


மூத்தவள் போகும் போது அழகு இளையவள் வரும்போது அழகு.

(மூத்தவளிடம் மூதேவி, இளையாவனிடம் லஷ்மி.)

மூத்தவருக்குப் பிறகு இளையவருக்கு முறையா?

மூத்தாள் சருகு அரிகசு, இளையான் அநுபவிக்கிறான்.

மூத்தான் பதிவிரதை என்றால் இளையாள் அவிசாரியா?

(யாா்)

மூத்தாள் பெண் வாழ்வும் முழங்கையில் பட்டி சுகமும். 19045


மூத்தான் வாழ்வு முழங்கையில் இடித்த இடம் போல இருக்கும்.

மூத்தாளும் முட்டுக்கு உதவுவாள்.

மூத்தாளே வாடி, முட்டிக் கொண்டு சாவோம்: இளையாளே வாடி மலையாளம் போவோம்.

மூத்தாளை விட்டு இளையாளைப் பட்டம் கட்டின கதை.

மூத்திரக் குழியில் தீர்த்தம் ஆடுகிறதா? 19050


மூத்திரத்தை நம்பிக் கட்டுச்சாதத்தை அவிழ்த்தானாம்.

மூத்திரம் பெய்வதற்குள் முந்நூற்றெட்டுக் குணம்.

(முப்பத்தெட்டு.)