பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தமிழ்ப் பழமொழிகள்


மெ

மெச்சி எச்சில் இலை போட்டு மீந்ததை மடியில் கட்டுவார்களா?

மெச்சிக் கொள்ளுகிறதற்கு எச்சிலை எடுக்கிறது.

மெட்டி போடுவதில் என்ன இருக்கிறது? தட்டி நடப்பதில் இருக்கிறது.

மெத்த அத்து மிஞ்சின பேச்சுக்காரன்.

மெத்தப் படித்தவருக்குச் சோறு வெல்லம். 19115


மெத்தப் படித்தவன் சித்தம் சரியில்லை.

மெத்தப் படித்தவன் பைத்தியக்காரன்.

மெத்தப் பரிவாம் உள்ளே எரிவாம்.

மெத்தப் புடைவை மெத்தக் குளிர்.

மெத்தை நேர்த்தி, தலையணை பீற்றல். 19120


மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.

மெதுவாய்ச் சாப்பிட்டால் அதிகம் கொள்ளும்.

மெய் ஆனால் வைத்துக் கொள்; பொய் ஆனால் விட்டு விடு.

மெய் இருந்து விழிக்குது; பொய் இருந்து பொரிக்குது.

மெய் என்று இருந்தேன், விழித்தேன் கனவாக. 19125


மெய் ஒழுக்கத்தார்களுக்கு மேன்மை இல்லை ஒருகாலும்.

மெய்க்கும் பொய்க்கும் விரற்கடை தூரம்.

மெய் கிடந்து மெலியுதாம்; பொய் கிடந்து பொலியுதாம்.

மெய் கொண்டு விழிக்கிறது; பொய் கொண்டு புரிகிறது.

மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை; பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை. 19130


மெம் சொல்லி வாழாதவன் பொய் சொல்லி வாழ்வானா; மெய்ஞானம் உடையாருக்கு அஞ்ஞானம் இல்லை.

மெய்த் தொழில் என்றும் மெய் பயக்கும்.

(மேன்மை.)

மெய் தவிக்கும்? பொய் புலம்பும்.

மெய் நின்று விழிக்கிறது; பொய் நின்று கூத்தாடுகிறது. 19135

(பொரிகிறது.)