பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 3 தலையை வகிரும் சடங்கினைச் செய்யும்போது தலையி விருந்த வடுவைக் கண்டு காரணம் கேட்டான். அவளும் தான் காயம்பட்ட வரலாற்றைக் கூறினுள். அதைக் கேட்ட பகவன், ' நீ ஆதியளா?' என்று கூறி அவள் (இதனால்தான் அவளுக்கு ஆதி யென்னும் பெயர் வந்தது. புலேச்சி என்றறிந்த காரணத்தால் பகவன் அவளுடன் வாழ விரும்பாமல், அவளே விட்டுவிட்டு ஒடினன். ஆதியும் அவனைத் தொடர்ந்தாள். பின்பு இருவரும் ஓரிடத்திலும் கிலேக்காமல் தேச சஞ்சாரம் செய்யத் தீர்மானித்தனர். பகவன் ஆதியை நோக்கி, நமக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பிறந்த இடத்தி லேயே விட்டுவிட வேண்டும். இதற்குச் சம்மதமானுல் என்னைத் தொடரலாம்” என்று அறிவிக்க, ஆதியும் அதற்கிசைந்தனள். அங்ஙனமே தங்களுக்குப் பிறந்த ஏழு குழந்தைகளேயும் பிறந்த இடத்திலேயே விடுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்படிப் பிறந்தவர்களே ஒளவை, உப்பை, அதிகமான், உ, அவை. கபிலர், வள்ளி, திருவள்ளுவர் என்ற எழுவர் ஆவர். ஒளவையே முதல் குழந்தை. ஒவ்வொரு குழந்தையும் தன்னைப் பெற்றபோது பிரிய மனமின்றி நின்ற தாயை நோக்கி, ஒவ்வொரு பாடலேப் பாடியது. ஒளவை பிறந்த போது, 'அம்மா, என்ன விட்டு நீங்குவது குறித்து வருந்த வேண்டா. என் வாழ்வு இந்த விதமாகத்தான் அமையும் என்று என் கலேயில் எழுதிப் பிறக்கவைத்த சிவபெருமான் சாகாமல் இருக்கின்ருன். எவ்வளவு பஞ்சம் வந்தாலும் படைத்தவனுக்கே, காக்கவேண்டிய கவலையும் பொறுப்பும் ஆகும்” என்ற பொருளில் ஒரு பாடலேப் பாடப் பெற்ற இடத்திலேயே ஆதி மனம் தளராது, அக்குழந்தையை விட்டு மேலே சென்ருள்.