பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. புகழேந்திப் புலவர் பிறப்பகமும் பெயர்க் காரணமும் தமிழ்ப் புலவர்கள் யாப்பு இலக்கணம் கற்று எல்லா வகைப் பாடல்களேயும் பாடும் திறமை பெற்ற வர்களாய் இருந்தாலும், அவர்களுள் சிலர் குறிப்பிட்ட பாடலைப் பாடுவதில் தலே சிறந்தவர்களாய் இருந்தனர். அப்படப்பட்ட புலவர்களில் புகழேந்திப் புலவரும் ஒருவர் ஆவார். அவர் வெண்பா என்னும் பாட்டைப் பாடிப் பிறரை இன்புறச் செய்த காரணத்தால் அவரை வெண்பாவில் புகழேந்தி என்று சிறப்பிக்கத் தொடங் கினர். அவரது வாழ்க்கை வரலாற்றையும் அறிந்து கொள்வோமாக. தொண்டை நாடு சான்ருேரை மிகுதியாகப் பெற் றது என்பது உங்களுக்கு நன்கு தெரியும் அத்தகைய பெருமை மிகுந்த நாட்டைச் சார்ந்த கோட்டங்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று களத்தூர்க் கோட்டம் என் பது. அக் களத்தார் ஒரு காலத்தில் பொன் விளையும் ஊராக இருந்தது. அக்காரணம்பற்றி அவ்வூர் பொன் விளைந்த களத்தூர் என்ற" பெயராலும் குறிப்பிடப் பட்டது. பொன்விளேந்த களத்துரர் பொற்களங்தை என் அம் மருவலாயிற் று. இத்தகைய பெருமை நிறைந்த ஊரில் நம் புலவர் பெருமான் பிறந்தருளினர். இவ ருக்கு இவரது பெற்றேர்கள் இட்ப் பெயர் இன்னது என்பது நாம் அறிந்து கொள்ள இயலவில்லை. இவரது பெற்ருேரே யார் என்று அறிய முடியாத நிலையில், இவரது இயற்பெயர் எப்படி மக்குத் தெரியவரும் ? ஆல், இப்புலவர் சிகாமணியார் இளமை முதற் கொண்.ே தமிழ் இலக்கண இலக்கியங்களேக் கற்றுத்