பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தமிழ்ப் புலவர் அறுவர் செய்யலானன். அதன் பொருட்டு ஆசிரியர்களே வெளியில் எங்கும் தேடாமல், தன் அருகே அவைக் களப் புலவராக இருக்கும் புகழேந்தியாரையே, தன் மகளுக்குக் கல்வி புகட்ட ஏற்பாடு செய்யலாளுன். புகழேந்தியாரும் அரசனது மகளுக்குக் கல்வியைக் கற். பித்து வரலார்ை. இலக்கண இலக்கியங்களையும் போதித்து வந்தார். அம்மாதராளும் ஆசிரியர்க்குக் கீழ்ப்புடிந்து, ஆசிரியர் கற்பித்துக் கொடுத்துவந்ததை மறவாமல் கற்றுப் புலமையில் சிறந்தவளாய் விளங்கி ள்ை. இதைக் கண்டு அரசமகளின் பெற்ருேரும், மற் ருேம் களிப்புற்றுப் புகழேந்தியாரின் போதிக்கும் வன்மையினைப் புகழ்ந்து பேசலாயினர். இப்படிப் புலவர் புகழேந்தியார் மதுரை மன்னனும், மற்றும் உள்ளாரும் போற்றவும் பாராட்டவும் மன்னன் சபை யில் மாண்புடன் காலத்தைக் கழித்து வரலாயினர். புலவர் சோழ நாடு புக நேர்ந்தமை இப்படி இருக்கையில் சோழநாட்டில் குமாரகுலோத் துங்க சோழன் அவைக்களத்தை அலங்கரித்து வந்த புல வர் ஒட்டக் கூத்தர் ஆவர். அவர் குலோத்துங்க மன்னது ஆசிரியர். அம்மன்னனுக்கு மணம் முடித்து வைக் கும் பொறுப்பில் ஒட்டக் கூத்தர் ஈடுபட்டார். அதன் பொருட்டு மதுரைக்கு வந்தார். வரகுண பாண்டியன் மகளேச் சோழகுலத் திலகனை குமார குலோத்துங்க சோழனுக்கு மணம் செய்து கொடுக்குமாறு கேட்க, மதுரைவந்து சேர்ந்தார். பாண்டியமன்னன் 'சோழர்கள் பாண்டியன் மகளே மணக்கத் அவ்வளவு தகுதியுடைய வர்களோ?' என்று கேட்க ஒட்டக் கூத்தர் சோழர்கள் தகுதியுடையவர்கள் என்று கூறியதோடு நில்லாமல்,