பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேந்திப் புலவர் 94. சோழர்கள் பல காரணங்களால், பாண்டியர்களேவிடச் சிறந்தவர்கள் என்று கூறினர். புகழேந்தியார், ஒட்டக் கூத்தர் கூறிய கருத்தைக்கொண்டே பாண்டியர்களே சோழர்களேவிடத் தலைசிறந்தவர்கள் என்பதைக் காரணத்தோடு கூறிப் பாண்டியர் பெருமைகளே எடுத் துக் காட்டினர். இப்படி இருவரும் வாய்ப்போர் செய் வகைக் கண்ட வரகுண பாண்டியன் இருவரையும் கையமர்த்திச் சமாதானம் செய்து தன் மகளேச் சோழ லுக்கு மணம் செய்து கொடுப்பதாக ஒட்டக் கூத்த ரிடம் கூற, அவரும் திரும்பிச் சென்று தன் மாணவ மன்னனிடம் பாண்டியன் தன் திருமகளே மணம் செய்து கொடுக்க இசைந்ததை அறிவித்தனர். குலோத்துங் கன் மனம் மகிழ்ந்து, பின் நல்லதொரு நாளில் மதுரை நோக்கிப் புறப்பட்டுத் திருமணத்தினே இனிதில் முடித் துக் கொண்டனன். பின்பு சோழ மன்னன் தன் மனையா ளாகிய பாண்டியன் மகளே அழைத்துக் கொண்டு தன் நாடு செல்லப் புறப்படுகையில், பாண்டிய மன்னன், தன் மகளுக்குத் துணையாக இருக்கவேண்டிப் புகழேங் தியாரை அவளுடன் அனுப்பி வைத்தனன். - புலவர் சிறைப்படல் குலோத்துங்க சோழ மகாராசன் திருமகளே மணந்து செல்லும் திருமால் போலப் பல வகை பூl கனப் பொருள்களேயும் பெற்றுத் தன்னடு புகுந்தான். ஒட்டக் கூத்தருக்ளுப் புகழேந்தியாரும் சோழநாடு வக் தது பற்றி உள் ளுக்குள் மகிழ்ச்சியாகும். அம்மகிழ்ச்சிக் குக் காரணம் அப்புலவரை எப்படியேனும் அரசனு டைய உத்தரவு பெற்றுத் துன்புறும்படி செய்யலாம் என்பதற்கென்க. எனவே, ஒட்டக் கூத்தர் தம் மாணவ தன்னனிடம் 'அரச, இப்போது இங்கு வந்துள்ள புக