பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தமிழ்ப் புலவர் அறிவர் அன்பினைக் காட்டுவதற்காகவும் ' புலவரே, ஒட்டியே பாடுக” என்றனன். புகழேந்தியார், ஒட்டக் கூத்தர் பாடலேயே கொண்டு, 'நானே புலி, சுரு, சூரியன் முதலியவற்றிற்கு ஒப்பானவன். ஒட்டக் கூத்தரோ மான், வற்றிய காடு, மீன், பனி ஆகிய இவற்றிற்குச் சமமானவர்” என்று கூறினர். இப்படி விடை கொடுப் பார் என்று ஒட்டக் கூத்தரும் மன்னனும் எதிர்பார்க்க வில்லை. ஒட்டக் கூத்தருக்கு மேலும் புகழேந்தியார் மீது கோபமும் பொருமையும் மிகுந்தன. இதல்ை புக ழேந்தியார் சிறைவாசமும் நீடித்தது. கூத்தர் செருக்கு அடக்கப்படுதல் அரைகுறையாகப் படித்த புலவர்கள் அரசர் களின் அவைக்களம் புகுந்து பாடல்களேப் பாடிப் பரிசு பெற்றுப் போவது அந்த நாள் வழக்கம். அவ் வழக்கப்படி ஒட்டக் கூத்தர் காலத்தில் சில புலவர்கள் குலோத்துங்கனப் பாடிப் பரிசு பெற வருவர். அவர் களே ஒட்டக் கூத்தர் சில கேள்விகளைக் கேட்பர். அக் கேள்விகளுக்குத் தகுந்த விடைகளேஅவர்கள் கூரு ராயின் அவர்களேச் சிறைப்படுத்தி நவராத்திரியின் போது சிறைப்பட்டவர்களைக் காளி கோவில் முன் நிறுத்தி, இருவர் இருவராக அவர்களின் மயிர் முடி களேப் பிணைத்துத் தலைகளே இறங்க வைத்து வெட்டுவது வழக்கம். இங்கனம் அறிவால் குறையுடைய புலவர் களே முன் காலத்தில் தண்டித்த அரசர்களும் புலவர் களும் இருந்திருக்கின்றனர். அதிவீரராம பாண்டியர் கல்வி குறைந்தவர்களைத் தலையில் குட்டி அடக்கி வந்தனர் என்றும், தம்மோடு வாதில் தோற்றவர்களின் காதுகளே வில்லிபுத்தார் ஆழ்வார் அறுத்து வந்தனர் என்றும், ஒட்டக் கூத்தர் குறையுடைய புலவர்களின்