பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேக்கிப் புலவர் §§ தலைகளே இறங்கப் போட்டு வெட்டி வந்தனர் என்றும் ஒரு பாடலே நமக்கு அறிவிக்கின்றது. அப்படிப் பட்ட பெரும் புலவர்கள் பிற்பட்ட காலங்களில் இல்லாமை யால்தான், எல்லோரும் கவிகளாகப் புலவர்களாக வெளிவரத் தொடங்கினர் என்றும் அப்பாடலே குறிப்பிடுகிறது. அப்பாடலே, குட்டுதற்கோ பிள்ளைப்பாண் டியனிங் கில்லே. குறும்பியள வாய்க்காதைக் குடைந்து கோண்டி, எட்டினமட் டறுப்பதற்கோ வில்லே யில்லே. இரண்டொன்ருய் முடிந்துதலே இறங்கப் போட்டு, வெட்டுதற்கோ கவிஒட்டக் கூத்தன் இல்லே. விளையாட்டாக் கவிதைதனே விரைந்து பாடிக் தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகள் உண்டு. தேசமெங்கும் புலவரெனத் திரிய லாமே. என்பது. இப் பாடலில் குறிப்பிட்டபடி ஒட்டக் கூத்தர் புலவர்களே அவமானப்படுத்தி வந்தார். அப்படி அவ மானப்பட்ட சிற்றறிவுடைய புலவர்கள் சிலர் புகழேங் தியார் அடைபட்டுக் கிடந்த சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர். புகழேந்தியார் தம் பொழுதை வீணுக் காமல் அவர்கட்குத் தமிழ் அறிவைப் புகட்டி வந்தார். தமிழில் உள்ள எழுத்து, சொல், பொருள், யர்ப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களேயும் இலக்கியங்களையும் கற்பித்துக்கொடுத்தார். அவர்களும் ஊக்கமாகக் கற் றுத் தேர்ந்து புலமை மிகுந்தவர்களாய் விளங்கினர். தாமாகவே கவிபாடும் வல்லமையும், சமயத்திற்கேற்ற வாறு கற்பனையுடன் பாடும் தன்மையும் பெற்றனர். அப்படிப் புலமை பெற்றவர்கள் குயவர் குலத்தவரும்,