பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழ்ப் புலவர் அறுவர் நாவித மரபினரும், இரும்புக்கொல்லர் இனத்தவரும், தச்சர் மரபினரும், ஆடைவெளுக்கும் வண்ணுர் குலத்த வரும் வேளாளர் வமிசத்தினரும் ஆவர். நவராத்திரி பண்டிகையும் வந்துற்றது. அரசனும் அமைச்சரும், சேனைத்தலைவரும், மற்றுமுள்ள சிப்பக்தி களும் தேவி சிறப்புற விற்றிருந்த திருவிழா மண்டபத் தில் வந்து அமர்ந்திருந்தனர். கூத்தரும் குது கலத் துடன் அங்கு வந்து சேர்ந்தார். அவருக்கென அமைக் கப்பட்ட ஆதனத்தில் வந்து அமர்ந்தார். உடனே ஏவ லாளர்களே அனுப்பிப் புகழேந்தியாரைத் தவிர்த்து மற்றைய சிற்றறிவுடைய புலவர்களே அழைத்து வரு மாறு கட்டளையிட்டனர். அவர்களும் சென்று சிறை யில் அடைபட்டுக்கிடந்த குலாலன், நாவிதன், கொல் லன், தச்சன், வண்ணுன், வேளாளன் ஆகிய அறுவர் களையும் அழைத்து வந்தனர். இவ்வறு வரும் கல்வியில் தலைசிறந்து விளங்கியதால், சிறிதும் அச்சம் கொள்ளாத வராயப் பெருமித நடையுடன் விழா மண்டபத்தைக் குறுகினர்கள். ஒட்டக் கூத்தர் தம்முன் கிறுத்தப்பட்டவர்கள் நிரம்பிய புலமை பெற்றவர்கள் என்பதைச் சிறிதும் அறியார். அவர்களே முன்பு அறிந்த குறையறிவுடைய புலவர்களென்றே நினைத்து விட்டனர். ஆகவே, குயவனகிய புலவனப் பார்த்து, முன்னேவந்து நிற்கு மாறு ஏவினர். அவனும் ஒட்டக் கூத்தருக்கு வணக்கம் செலுத்தாமல் செருக்குடன் கின்றனன். இதைக் கண்ட கூத்தர், "மோன முத்தமிழ் மும்த மும்பொழி ஆனை முன்வந் தெதிர்த்தவன் ஆரடா?” என்று அதட்டிக் கேட்டனர். இதில் கூத்தர் தம்மை