பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேந்திப் புலவர் ህ? யானேயாக உருவகப்படுத்திக் குறிப்பிட்டதால் அதற்கு ஏற்ப விடை தரவேண்டும் என்று எண்ணிய குயவன், தான் குயவன் என்ற பொருளும், யானையை அடக்கும் அங்குசம் போன்றவன் என்னும் பொருளும் தோன்ற, 'கூனே யும்குட மும்குண்டு சட்டியும் பானே யும்செய்யும் அங்குசப் பயல்யான்” என்று பதில் அளித்தான். கூத்தர் கிடுகிடுத்துப் போளுர்;வெட்கமும் கொண்டார். என்ருலும்,அவற்றை வெளிக்காட்டாமல், மேலும் தம் பெருமிதம் தோன்ற, அடுத்து கின்ற அம்பட்டனேப் பார்த்தார். அவனுடைய கண்களில் ஒன்று ஊனமுடையதாய் இருந்தது. அத ஒல் அவனைப் பார்த்து, அவன் ஏதோ தன்னைப் பார்த்து நடுங்குவதாகக் கூத்தரே எண்ணிக் கொண்டு, 'கண் பொட்டையானவனே, கொக்கு, இராஜாளிப் பறவை யைக் கண்டு நடுங்குவது போல நடுங்கி கிற்கின்ருயே! ‘'நீ யார் கூறு?’ என்று கேட்டனர். அவனும் சிறிதும் இந்த மிரட்டல் மொழிக்கு அஞ்சாதவனுய், 'கண்பொட்டை யாயினும் அம்பட்டன் நான் கவிவாணர் முன்னே பண்பட்டசெந்தமிழ் நீயும் திடுக்கிடப் பாடுவனே' என்று எதிர்மொழி கூறினன். இவ்வாறு இரண்டு முறை, இரண்டு விடைகளும் கம்பீரமாக வருதலேக் கண்ட கூத்தர் இனி, இவர்களேச் செய்யுள் வடிவில் வினவல் ஆகாது. உரை நடையாகவே கேள்விகளைக் கேட்டல் வேண்டும்' என்று எண்ணி. மூன்ருவதாகக் கொல்லனே அழைத்து, 'நீ யாவன்? என்று கேட்டனர். ஆனால், அவனும் தன் ஆற்றல் இவ் அளவு என்பதை அறிவிக்க, கூத்தர் உரை நடையில் r;