பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

స్త్ தமிழ்ப் புலவர் அறுவர் கேட்டலும், தான் செய்யுள் வடிவிலேயே கீழ்வரும் பொருளில் 'யான் மரபில் கொல்லன்; என் கவியை எவரேனும் குறை கூறுவராயின் அவர்கள் பல்லேப் பிடுங்கிடுவேன். பகைவர் முன், இரவும் பகலும், கவி யாகிய இரும்பாணியைக்கொண்டு அடிப்பேன்’ என்று பதில் அளித்தனன். இந்தப் பதிலேயும் கேட்ட ஒட்டக் கூத்தர் பின் தச்சனக் கூப்பிட்டு, அவனேயும் விசாரித் தார். அவனும் பாடலிலேயே, கீழ்க்கண்ட பொருளில் 'ஐயா, யான் என்ன எதிர்த்தவர் வாயைக் கிழித்துக்கவியாகிய ஆப்பைக் கடாவுவன்' என்று கூறி னன். அதன் பின் புலவர் வண்ணுனேக் கூப்பிட்டு “நீ யாவன்?’ என்று வினவ, அவன் 'கூத்தரே, யான் உம் போன்ற புலவர்களின் நூலில் காணப்படும் குற்றங்க ளாகிய அழுக்கைப் போக்கித் தாய்டை யாக்கும் வண் ணுரக்குலத்தவன்” என்று விடை இறுத்தான். சரி; இறுதியாக வுள்ளவன் என்ன பதில் கூறுகின்ருன்? பார்ப்போம் என்று வேளாள மரபினனைப் பார்த்து, *நீயும் புலவன் தானே? ஒப்பாரும் மிக்காரும் இல்லா மல் சிறந்து விளங்கும் என் முன் நீயும் புலவன் என்று கூற உள்ளம் துணியுமா?’ என்று தம்மை அவயத் தர் முன் சிறப்பித்துப் பேசி வேளாளன விஞ்வினர். இப்படிப் பேசில்ை வேளாளன் பயந்து தனக்கு முன் பதில்களைக் கூறியவர்களைப் போலத் துட்டத் தனமாக விடைகளைக் கூருமல், தனக்கு அடங்கி ஒடுங்கிப் பதில் அளிப்பான் என்ற எண்ணத்தோடு இவ்வாறு வின வினர். ஒட்டக் கூத்தர் எண்ணியது போலவே வேளச ளன் அடக்க ஒடுக்கமாகவே விடை அளித்தன. ஆல்ை, அவன் விடையில் உள்ளூரச் சிறந்த பொ. கிரம்பியிருந்தது; ஒட்டக் கூத்தர் கல்விச் செரு