பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேக்கிப் புலவர் } அடக்கக்கூடியதாகவும் இருந்தது. அதாவது, “கவிச் சக்ரவர்த்தி என்னும் பட்டம் பெற்ற ஒட்டக் கூத்தரே, கேளும். பேர் அரசர்களேக் கண்டு சிற்றரசர்கள் காட் டில் வாழாமல் கடலில் சென்ரு ஒளிந்து கொண்டனர்: தாமரைமலர் தன் பக்கவில் மலர்வதனால், காம் மலர்தல் கூடாது என்று கொட்டி மலர் மலராமல் இருந்ததோ? ஆதவின், உன் கவியைக் கண்டு ம்ை போன்ற கவிகள் ஒளிந்து வாழ்வரோ ஒருக்காலும் வாழார்' என்த பொருளில் பாவடிவில் விடை கூறிஞன். கூத்தர் ஒன்றும் செய்வதற்கில்லே. அந்த வருடம் அவரது விரதமாகிய காளிமுன் கல்வியறிவற்ற புலவர்களே வெட்டும் செயலே கிகழ்த்த முடியவில்லே. தம் செருக்கு அடக்கப்பட்டதை அறிந்து, அப்புலவர்கட்குத் தகுந்த சன்மானங்களேக் கொடுத்து அனுப்பினர். அது முதல் இத்தகைய செயலே கிறுத்திவிட்டார். இவ்வளவுக்கும் காரணம் அந்தப் புகழேந்தியார்தாம் என்று அறிந்து, அவர் மீது தனியாக் கோபம் கொண்டு அவரைச் சிறை க்ேகத்திற்கான வழிகளேக் காணுது இருந்தார். புலவர் சிறை நீக்கம் புகழேந்தியார் சிறைப்பட்டிருந்த செய்தி பாண்டி பன் மகளான குலோத்துங்கன் மனைவியாருக்குத் தெரி யாது. ஆனால், “பல நாள் திருடு ஒரு நாளேக்கு வெளி யாகும்' என்பது ஒரு பழமொழியல்லவா? அரசமா தேவிக்கு எப்படியோ தம் அருமை ஆசிரியராகிய புலவர் பெருந்தகையார் சிறைப்பட்ட செய்தி தெரிய வந்தது. அது குறித்துத் தேவியார் மிகவும் வருக்தி ஞர். “தம்முடன் வந்ததால் அல்லவோ இந்தத் துன்பம் அனுபவிக்கக் கவிஞர் பெருமானுக்கு நேர்ந்தது:” என்று எண்ணித் துன்புற்ருள். இனியும் தாம் சும்மா