பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:00 தமிழ்ப் புலவர் அறுவர் இருப்பது அடாது என்று தீாமானித்தவளாய், தன் கணவன் அந்தப்புறத்தில் தன் அறைக்கு வரும்போது, அவரை உள்ளே வர ஒட்டாமல் செய்து, பின்பு நிகழ் வனவற்றைக் காண்போம்” என்று திடம் செய்து கொண்டு தன் அறையின் கதவை நன்கு தாளிட்டுக் கொண்டே உள்ளே இருந்தாள். குமார குலோத்துங்கன் தன் அலுவல்களே முடித் துக்கொண்டு மனேயாளோடு இன்னுரைகள் பல பேசி இன்புறலாம் என்ற கருத்துடன் வந்தனன். வந்தபோது, தன் மனேயாள் அறைக் கதவு என்றும் இல்லாமல் அன்று தாளிடப்பட்டிருந்ததைக் கண்டு, தட்டித் தட் டிக் கூப்பிட்டுப் பார்த்தான். தேவி சிறிதும் மனம் இரங்காமல்-கதவைத் திறக்காமல் உள்ளேயே இருந்த னள். அந்தச் சமயம் அரசியின் தோழி, மன்னனே வணங்கி, மன்னர் பெருமானே, இன்று தேவி ஏதேர்,மண் வேதனையோடு அறையில் தாளிட்டுப் படுத் துக்கொண்டிருக்கிருள். யார் வரினும் தன்னை எழுப்ப வேண்டாவ்ென்று எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கின் ருள். இதுவே காங்கள் அறிந்த செய்தி' என்றனள். அக்காலத்தில் அரசனுக்கும் அவன் தேவிக்கும் ஏதேனும் சிறு சச்சரவு ஏற்பட்டால், அதைப் புலவர் ஆள் இடைகின்று சமாதானம் செய்துவைப்பது மரபு. அதன்படி தனக்கும் தன் தேவிக்கும் ஏற்பட்ட ஊட லைத் தீர்த்து வைக்கக் குமாரகுலோத்துங்கன் ஒட்டக் கூத்தம் உதவியை நாடினன். தானும் புலவருமாகத் தன் தேவியின் அறையின் கதவருகே வந்து நின்றனன். அப்போது ஒட்டக் கூத்தர், "இலக்குமி போன்ற பேர் அழகுவாய்ந்த மாதரசி, நான் உன்னேக் கதவு திறவாய் என்று கேட்கவும்.வேண்டுமோ? சூரியன் வருகை கண்