பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேக்கிப் புலவர் 黑鲁懿

உால் தாமரை தானே மலர்ந்து வரவேற்பது போன்று, சூரியகுலதிலகளுகிய குலோத்துங்கன் சின் அறையின் முன் வந்து கின்ருல், உன் கரமாகிய தாமரை தானே திறக்கும் அல்லவோ ?” என்னும் கருத்தமைத்துப் பாட்டுப் பாடிஞர். இது ஒட்டக் கூத்தரது பாடல் என்று அறிந்துகொண்ட தேவி 'ஒட்டக் கூத்தன் பாட் டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்று கூறிக் கதவை இரட்டைத்தாழ் இட்டு நன்கு அழுத்தி அடைத்து விட்டனள். குலோத்துங்கனுக்கு அப்போதுதான் தன்கேவிக்கு ஒட்டக் கூத்தர்மீது வெறுப்பு உண்டு போலும் என் பதை உணர்ந்தான்; இவ்வெறுப்புக்குக் காரணம் தன்னுடன் வந்த புலவர் திலகரை இவர் சொல் கேட் டுச் சிறைப்படுத்தியதனுல் போலும் என்பதையும் யூகித்து அறிந்துகொண்டனன். உடனே ஏவலாளர் களே அனுப்பிப் புகழேந்தியாரைச் சிறை நீக்கம் செய்து அழைத்து வருமாறு கட்டளேப் பிறப்பித்தான். அவ் வாறே சிறை நீக்கப்பட்டுப் புகழேந்தியாரும் வந்து சேர்ந்தார். அரசன் புலவர் திலகரைக்கண்டு வணங்கி, 'ஐய புலவர் ஏறே, உம் பெருமையறியாது யான் இதுவரை உம்மைச் சிறையில் வைத்ததும் பெருங் குற்றமே. இதுபற்றி என் குற்றத்தைப் பொறுத்து என்னையும் மன்னிக்க வேண்டும்” என்று வணங்கிக் கேட்டுக்கொண்டனன். புகழேந்தியார் தம்மைப் பேர் அரசன் மன்னிப்புக் கேட்டுக்கொள் கின்ருன் என்பதற் துத் தம்மைப் பெருமைப்படுத்திக்கொள்ளாமல் “மன்ன, Aான் சிறைப்படவேண்டும் என்று எனக்குப் பழைய வினே இருக்குமானுல், அதனின்று தப்பமுடியுமா? இது பற்றியானே, அன்றி நீயோ,வருந்துவதில் பயன்யாது: