பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ió2 தமிழ்ப் புலவர் அறவர் என்று கூறினர். குமார குலோத்துங்கன் புகழேந்தியா ரிடம் தன்மனேவிக்குத் தன்பால் ஏற்பட்டுள்ள பிணக் கத்தைப்பற்றிக் கூறி அவ்வூடலேத் தணிக்குமாறு: அவரை வேண்டினன். புலவர் அவன் விருப்பத்தை கிறைவேற்றிவைக்க, தேவி இருந்த அறைக்கு அருகு சென்று தாளிடப்பட்ட கதவின் முன் நின்று, 'அன்னம் போன்ற அழகும் குணமும் உடைய அம்மையே, உன் கணவன் வந்து வாயிற்கடை கின்றுள்ளான். உனக்கு எவ்வளவு கோபம் இருப்பினும், அதனைத் தணித்துப் பொறுப்பாயாக. பொறுப்பது உன் குலத்தின் இயல் பல்லவோ? பிழைகளேப் பொறுப்பது மாதர்கள் கடமை யும் அல்லவோ ?’ என்னும் கருத்தமைத்துப் பாடலேப் பாட, உடனே தேவி கதவைத் திறந்தாள். மன்னனும் மகிழ்ந்தான். புகழேந்தியார் சோழன் அவைக்களப் புலவருள் ஒருவராய்த் திகழ்ந்தார். இருந்தாலும் தமக் குச் சோழ நாட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. ஆகவே, சோழ மன்னனிடம் விடை பெற்றுக்கொண்டு வெளி யேறினர். கனவெண்பா பாடப்படுதல் புகழேந்தியார் சந்திரன் சுவர்க்கி என்னும் வள்ள லேப்பற்றிக் கேள்வியுற்றிருந்தார். அவன் மள்ளுவ காட்டை ஆண்டு வந்த ஒரு சிற்றரசன். அக்காட்டின் தக்லநகரம் முரணை என்பது. அங்குச் செல்வது எனத் தீர்மானித்தார். அவ்வறே சந்திரன் சுவர்க்கியைப் புக ழேந்தியார் அடைய, அவன் புலவர் பெருமானுக்கு நல் சைவு கூறித் தன் அவையில் சமத்தானக் கவியாக அதை அமர்த்திக் கொண்டான். சந்திரன் சுவர்க்கி புகழேந்தியாரைப் பற்றி கன்கு கேட்டு அறிந்திருந்தான். அத்தகையவர் தன்னே காடிவந்தது கும்பிடப் போன