பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#04 தமிழ்ப் புலவர் அறுவர் சனி வந்து அணுகியது என்று கூறுவாராயின், இதை விட வேறு எந்த முறையில் சந்திரன் சுவர்க்கியின் கொடைக் குணத்தைச் சிறப்பித்துக் கூ ற முடியும் ? அப்படியே, கலி நளனவிட்டு நீங்கியதைக் குறிப்பிட வந்த புகழேந்தியார், சந்திரன் சுவர்க்கியைக் கொண்டா டும்பாவலன், பசி நீங்கியது போலச்சனி நீங்கினன் என் றும் குறிப்பிட்டார். இதுவன்ருே புலவர்கள்பால் இருந்த செய்ங்கன்றி மறவாத பண்புக்கு எடுத்துக் காட்டு சந்திரன் சுவர்க்கியும், தன் வேண்டுகோளுக்கு இணங்கிப் புலவர் நூலேப் பாடினமைக்காகப் பரிசில் பல தந்து பாராட்டிப் பெருமைப்படுத்தின்ை. புகழேந்தி யார் சிறப்புடன் அவனிடமே அமர்ந்திருந்தார். சோழன் முன் களவெண்பா அரங்கேற்றம் குமார குலோதுங்கன் காதிற்கும் புகழேந்திப் புல வர் நளவெண்பா படி அரங்கேற்றிய செய்தி எட்டி யது. அவரைத் தன் அவைக்கு வரவழைத்து அந்நாலே அங்கும் அரங்கேற்றம் செய்விக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தான். ஆட்களே விடுத்துப் புலவரை அழைத்து வருமாறு ரவினுன் ஏவலாளர்களும் மள்ளுவ நாடு சென்று மன்னன் கட்டளையைக் கூறப் புலவர் சந்திரன் சுவர்க்கியிடம் விடைபெற்றுச்சோழன் அவைக்கவும் புகுந்தார். குலோத்துங்கன் புலவரை நல்வரவு கூறி வர் வேற் று, 'அன்புமிக்க அருந்தமிழ்ப் புலவரே, நீர் அருளிச் செய்த நளவெண்பாவை எம் அவையில் பிரசங்கம் செய்து பொருள் விரிக்க வேண் டும்' என்று வேண்டினன். புகழேந்தியாரும் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டனர். கல்லதொரு காளில் அரசனும் அமைச்சரும், சேனைத்தலைவரும், ஊர்ப் பொதுமக்களும், ஒட்டக் கூத்