பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தமிழ்ப் புலவர் அறுவர் ராமல், உம்மை வினே கொன்றுவிட எண்ணிக் கல்லும் கையுமாக வந்தேனே! என்னைப்போன்ற அவசரக்காரன் எவனேனும் இருப்பானே? என்னே மன்னியும்” என்று கூறி, ஒட்டக் கூத்தரைத் தழுவினர். ஒட்டக் கூத்தரும் "புகழேந்தியாரே, யான் உம்மைப் பல தொங் தரவுகளுக்கு ஆளாக்கிவிட்டேன். அவற்றை நீரும் பொருட்படுததலாகாது” என்று வேண்ட இருவரும் அன்று முதல் அன்பு கலந்த நண்பராய் விளங் கினர். இவர்களின் கட்புரிமையைக் கண்ட குலோத் துங்கனும், அவன் தேவியும் உள்ளம் பூரித்தனர். புகழேந்தியார் சில காலம் சோழ நாட்டில் இருந்து விட்டுப் பின் பாண்டிய நாடு புகுந்து அங்குச் சில நாள் இருந்து பின்கம் பிறப்பகமாகிய பொற்களந்தையை அடைந்து இன்புற்று வாழ்ந்து வரலார்ை. புலவர் காலமும் சமயமும் புகழேந்தியார் சமயம் வைணவம். அவர் களனுக் குக் கவி தொடர்ந்தது என்று கூறவந்த இடத்தில், நாராயணன்திரு நாமத்தைச் சொல்லாதவரைத் துன்பம் வந்து அடைவது போல களனச் சனியாகிய துன்பம் வந்து தொடர்ந்தது என்றும், அவ்வாறே களனேப் பிடித்த கலி நீங்கியதைக் குறிப்பிடும்போது, உலகளந்த பெருமாள் திருவடியை அடைந்தவர் அருவினை நீங்கு வது போலக் கலியும் களனேவிட்டு நீங்கியது என்றும் கூறுவதால் புகழேந்தியாருடைய சமயம் வைணவம் என்பது கன்கு புலனுகிறது. இவருடைய காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற். முண்டாகும். இவரும் ஒட்டக் கூத்தரது காலத்து இருக் கவராக நாம் இப்போது படித்தோம் அல்லவா?