பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 5 அக்காலத்தில் பழையனூர் என்னும் ஊரில் காளி யென்னும் குடியானவைெருவன் இருந்தான். ஒரு நாள் அவன் தன் வயலில் களையெடுத்துக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒளவையார் மிகவும் பசி யுடன் வந்துகொண்டிருந்தார். அவனிடம் சென்று, அவன் வைத்திருந்த கூழில் கொஞ்சம் வார்க்கும்படி கேட்டுக்கொண்டார். கூழைக் கொடுத்ததும் ஒளவை யார் போய்விடுவார் என்று கருதி, அவரைத் தன்னிடம் சிறிது நேரமாகிலும் இருக்கச் செய்து மகிழவேண்டும் என்பதற்காக அவனும் ஒளவையார் கையில் களைக் கொட்டைத் தந்து கொஞ்ச நேரம் களையெடுக்கச் செய்த பின்னர் அவர்க்குக் கூழைவார்த்தான். ஒளவை யாரும் கூழைக் குடித்துக் களேப்பு நீங்கி மேலே நடக் கலுற்ருர். அதிகமான் என்னும் சேர அரசன் ஒளவையா ரிடத்தில் அளவற்ற அன்புடையவன். அச்சேர மன்னன் விருந்து ஒன்றைத் தன் அரண்மனையில் நடத்தினன். அவ்விருந்தில் ஒளவையாரும் கலந்துகொண்டனர். எல்லோரும் பந்தியில் அமர்ந்து விருந்துண்ணும் சமயம், திடுமென ஒருவர் அங்குவந்து சேர்ந்தார். அப்போது யாரை எழுப்பி அந்த இடத்தில் வந்தவரை அமரச் செய்து உபசரிப்பது என்று சேரன் திகைத்துப் பின், யாரை எழுப்பினுல் தவருக எண்ணுர் என்பதை யூகித் துத் தனக்கும் ஒளவையாருக்கும் இருக்கின்ற நட்பின் காரணமாக ஒவையாரை நோக்கி, “அம்மையே, இங்கே வாராய்' என்று அழைத்துப் பந்தியில் இருந்து அவரை எழுப்பி வந்தவரை உபசரித்தான். ஒளவையாரும் அதுபற்றிச் சிறிதும் மனம் கோணுமல் எழுந்து, பின் அதிகமானுடன் இருந்து உண்டு களித்தார்.